பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168


ளின் எடைக்குமிடையிலான விகிதம்

coeliac disease : (நோயி.) வயிற்று நோய் : சிறு குழந்தைகள் சில வகை உணவுகளைச் செரிக்க முடியாமல் ஏற்படும் வயிற்று நோய். இது ஒரு பரம்பரை நோய் என்பர்

coercive force : (மின்.) வல்லந்த விசை : எஞ்சிய காந்த சக்தியை பூச்சியத்திற்குக் குறைப்பதற்குத் தேவைப்படும் காந்த விசை

coffer : (க.க.) உட்கண்ணறை : தளமுகட்டின் உட்குழிவான கண்ணறை

coffer dam : காப்பனை : நீருக்கடியில் கடைகால் போட உதவும் நீர் புகாத கூண்டு அமைவு

cog : (எந்.) சக்கரப்பல் : இயக்க விசை படர்விக்கும் எந்திரச் சக்கரத்தின் பல். சில சமயம் பல்லிணைகளைத் தவறாகப் பற்சக்கரம் என்கிறார்கள்

cogging : (உலோ.) உலோகக் கட்டியாக்குதல் : உலோக வார்ப்புக் கட்டிகளை உருட்டுதல் அல்லது காய்ச்சி அடித்தல் மூலம் முழுதும் உருவாகாத உலோகக் கட்டிகளாக உருவாக்குதல்

cohesion : (இயற்.) அணுத்திரன் கவர்ச்சி : ஒரே வகையான மூலகங்களிடையில் உள்ள கவர்ச்சி

coil : (மின்.) திருகு சுருள் : வட்டத்திற்குள் வட்டமான வளைய அமைப்புடைய மின் இயக்கக் கம்பிச்சுருள். இதில் மின்னோட்டம் பாயும்போது ஒரு மின்காந்தப் புலம் உண்டாகிறது

coinage bronze : (உலோ.) நாணய வெண்கலம் : நாணயம் அடிப்பதற்குப் பயன்படும் ஒர் உலோகக் கலவை. செம்பும், 2.5% வெள்ளீயமும் 2.5% துத்தநாகமும் இதில் 95% வெள்ளியமும், கலந்திருக்கும்

coincidental starter : (தானி; எந்.) ஒருங்கியங்கு தொடக்கி : இது எந்திர இயக்கத்தைத் தொடங்கிவைக்கிற வகை அமைவு. இதில் கால்மிதி முடுக்குக் கட்டையின் மூலம் தொடக்க இயக்க விசையும், பெட்ரோல் பாய்வும் ஒரே சமயத்தில் கட்டுப்படுத்தப்படுகிறது

coining : (உலோ.) நாணயமடித்தல் : உலோகங்களில் முத்திரையிட்டு நாணயம் உண்டாக்குதல்

coir : நார் : கயிறு செய்யப்பயன்படும் தென்னை நார், கயிறு, கால் மிதி, வடம், தரைவிரிப்பு முதலியன செய்யப்பயன்படுகிறது

coke : கல்கரி : நிலக்கீலார்ந்த நிலக்கரியை அடைக்கப்பட்ட அடுப்புகளில் இட்டு சூடாக்குவதன் மூலம் வாயுக்களையும், மற்றத் தனிமங்களையும் எரித்து அகற்றிய பின் எஞ்சி நிற்கும் சுட்ட நிலக்கரி. ஒரு டன் நிலக்கரியிலிருந்து மூன்றில் இரண்டு டன் கல்கரி தயாரிக்கலாம். இதில் 90% கார்பன் கலந்திருக்கும். இது எரிபொருளாகப் பயன்படுகிறது

cold chisel : (உலோ.வே.) வல்லுளி : அனலிலிடாமலேயே உலோகங்களை வெட்டும் ஒருவகை வல்லுளி. இது உலோகச் சிம்புகள் வெட்டுவதற்குப் பயன்படுகிறது

cold drawn : (உலோ.) தண் நீட்டல் : அனலிலிடாமலே உலோகங்களைத் துளைப் பொறியிலிட்டு இழுத்து நீட்டுதல்

cold flow : (குழை.) உருமாற்றம் : நெகிழ்திற வரம்புக்கு அதிகமான ஒரு விசையை இடைவிடாது பயன்படுத்துவதன் மூலம் உண்டா