பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
181

conjugate diameters : இணை விட்டங்கள்: கூம்பு வெட்டில் ஒன்று மற்றொன்றின் கோடியியிலுள்ள தொடுவரைக்கு ஒரு போகு ஆக அமையும்படி உள்ள இரண்டு விட்டங்கள்

conjugate foci : இணை குவியங்கள்: ஒன்றிலிருந்து புறப்படும் கதிர்களுக்கு மற்றது குவியமாக மாறிமாறி அமையும் இரு குவியப் புள்ளிகள்

conjugate mirrors : இணை ஆடிகள்: ஒன்றன் குவியத்திலிருந்து வெளிப்படும் கதிர்கள் மற்றொன்றின் குவியத்துக்கு மீளும்படி அமைக்கப்பட்ட கண்ணாடிகள்

connecting rod : (தானி) இணைப்புத் தண்டு : இரு முனைகளிலும் தாங்கிகளுள்ள ஒரு தண்டு, அல்லது ஆயம். இது வணரி அச்சுத் தண்டுக்கும் சுழல் தண்டுக்குமிடையில் இணைப்பு ஏற்படுத்துகிறது

connecting rod bearing : (தானி.) இணைப்புத் தண்டு தாங்கி: இணைப்புத் தண்டின் பெரிய முனையிலுள்ள தாங்கி. இது பெரும்பாலும் உலோகத்தாலானது. சிறிய முனையிலுள்ள தாங்கி, உலோக உள்வரி வகையைச் சேர்ந்தது

connection : (மின்) இணைப்பு : ஒரு மின்சுற்றுவழியின் பகுதிகளை இணைக்கிற மின் கடத்தி

connector: (மின்) இணைப்பான்: மின் தொடர்பில் மின் கடத்தும் கம்பிகளைப் பற்றிக் கொள்வதற்கான ஒரு சாதனம். மின் கடத்தும் கம்பிகளைத் தேவையானபோது துண்டித்துக் கொள்ளும் வகையில் இந்த இணைப்பானின் பிடித்துக் கொண்டிருக்கும்

conoid: கூம்புவடிவமுள்ள': ஏறத்தாழக் கூம்பு வடிவமைந்த பொருள்

conservation of energy : ஆற்றல் நிலைப்பாடு : தனிப்பட்ட அமைப்பில் உள்ள முழு ஆற்றலும் நிலைபெயராத் தன்மையுடையது என்னும் கொள்கை

conservatory : (க.க) இசைப்பள்ளி/கண்ணாடி வீடு:

(1) இசைச் சொற்பொழிவு ஆகியல்ற்றில் பயிற்சி அளிக்கும் பொதுப் பள்ளிக் கூடம்

(2) அருமையான செடி கொடிகளை வளர்க்கும் கண்ணாடி வீடு

consistency : (இயற்) அடர்த்தி அளவு : நெருக்கத்தின் அளவு

console : (க.க) சுவரொட்டு : நெஞ்சளவுச் சிலை, மலர்க்குவளை, சிற்ப உருவம் போன்ற அலங்காரப் பொருள்களைத் தாங்கும் மூல இணைப்பு

console : (விண்.) தளக் கட்டுப்பாடு : ஏவுகணைகளின் குறிப்பிட்ட செயற்பணிகளைக் கட்டுப்படுத்துவதற்காகத் தரையிலுள்ள மின்னியல் அல்லது எந்திரவியல் சாதனங்கள்

console model : சுவரொட்டு வானொலிப் பெட்டி மாதிரி வடிவம்: நான்கு கால்களில் நிற்கும் ஒரு பெட்டியினுள் உள்ள ஒரு பெரிய வானொலிப் பெட்டி. இதில் ஒளிக் கருவி முதலிய அனைத்துக் கட்டுப்பாட்டுச் சாதனங்களும் உள்ளடங்கி இருக்கும்

constant : (கணி) நிலை எண் : கணிதத்தில் மாறா மதிப்பளவு, இது கணிப்புக்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்படுகிறது

constant current : (மின்) மாறா மின்னோட்டம் : மின்னோட்ட அலகு மாறாமலிருக்கும் ஒரு மின்னோட்டம்