பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
184

contrast control : வேறுபாட்டு முனைப்புக் கட்டுப்பாடு: தொலைக்காட்சியில், ஒரு படத்தின் இருள் பகுதிக்கும், ஒளிப்பகுதிக்குமிடை யிலான விகிதத்தை மாற்றி, தொலைகாட்சிக் சைகை வலிமையினை முறைப்படுத்துவதற்காக ஒளிவாங்கிப் பெட்டியிலுள்ள ஒரு கட்டுப்பாட்டு அமைவு

control cable : (வானூ) கட்டுப் பாட்டுக் கம்பி வடம் : கட்டுப் பாட்டு நெம்புக்கோல் களிலிருந்து கட்டுப்பாட்டு மேற்பரப்புகளுக்கு செல்கிற அல்லது அவற்றை இணைக்கிற கம்பி அல்லது புரியிழை வடம்

control column : (வானூ) கட்டுப்பாட்டுத் தூண் : ஒரு விமானத்தில் நீளப்பாங்கானதும், பக்கநிலைப் பாங்கானதுமான கட்டுப்பாட்டு மேற்பரப்புகளை இயக்குவதற்காக அதன் மேல் முனையில் ஒரு சுழலும் சக்கரத்தைக் கொண்டுள்ள ஒரு நெம்புகோல். இதனைச் சக்கர நெம்புகோல் என்று கூறுவர்

control grid : (மின்) கட்டுப் பாட்டு மின்கம்பி வலை : ஒரு வெற்றிடக் குழாயில் எதிர்மின் வாய்க்கு அருகிலுள்ள மின்கம்பி வலை. இதன் வழியாக வெற்றிடக் குழாய்க்கு உட்பாட்டுச் சைகைகள் செலுத்தப்படுகின்றன

controllability: (வானூ) கட்டுப்படுத்துத் திறன் : விமானம் பறக்கும் உயரத்தை எளிதாகவும், மிகக் குறைந்த விசையைப் பயன்படுத்தியும் மாற்றுவதற்கு விமானியை இயல்விக்கக் கூடிய விமானத்தின் தன்மை

controllable propeller: (வானூ) கட்டுப்படுத் தத்தக்க முற்செலுத்தி : விமானத்தை முற்செலுத்தும் சுழல் விசிறி சுழலும்போது அதன் உந்து அளவினை மாற்றக் கூடிய வகையில் அலகுகள் பொருத்தப்பட்டிருக்கிற ஒரு முற்செலுத்தி அல்லது சுழல் விசிறி

controller : (மின்) கட்டுப்பாட்டுப் பொறி : ஒரு மின்னோட்டத்தை தானாகவே முறைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் அமைந்துள்ள ஒரு காந்தக் கருவி

controller resistance : (மின்) கட்டுப்பாட்டு மின்தடை : இது ஒரு மின்னோடியில் ஒரு குறிப்பிட்ட வேகத்தை அடையும் வரையில் மின் வழி மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தி வைக்கிற ஒரு மின்னோடி தொடக்கியின் மின் தடையினை இது குறிக்கிறது. இந்த மின்தடை, ஒரு மின்னோடியின் வேகத்தை மாற்றுவதற்குப் பயன்படுகிறது

control panel (தானி) கட்டுப்பாட்டுச் சட்டம் : தானியங்கியில் பயன்படும் பல்வேறு மின்விசைச் சாதனங்களையும் எந்திரங்களையும் கட்டுப்படுத்துகிற ஒரு தொகுதி

control rod : (மின்) கட்டுப்பாட்டுச் சலாகை : ஓர் அணு உலையின் மின்னாற்றலைக் கட்டுப்படுத்தப் பயன்படும் ஒரு சலாகை. இந்தச் சலாகை நியூட்ரான்களை ஈர்த்துக்கொள்வதால் அணு உலையின் மின்விசை வெளிப்பாட்டு அளவு குறைகிறது

control stick : (வானூ) கட்டுப்பாட்டுக் கோல் : விமானத்தில் நீளவாக்கிலும், பக்கவாட்டிலும் உள்ள கட்டுப்பாடுகளை இயக்குவதற்குரிய செங்குத்தான நெம்பு கோல், இந்தக் கோல் ஒரு பக்கத்திலிருந்து சென்று நகர்வதன் மூலம் ஏற்படும் விசையினால் முன் உந்து அளவினைக் கட்டுப்படுத்த முடிகிறது