பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
185

புறச் சுற்றுவழி மூலம் இணைக்கும் போது, அவற்றுக்கிடையே ஏற்படும் உச்சநிலை மின்னோட்ட வேறுபாடு

contactors : (மின்) தொடர்பான்கள் : மின்காந்த முறையில் அல்லது கையால் இயக்கப்படும் மின் தொடர்புகள்

contact point pressure: (தானி;மின்.) தொடர்பு முனை அழுத்தம்: தொடர்பு முனைகளை மூடிய நிலையில் வைத்திருக்கும் விற்சுருள் அழுததம்

contact points (தானி:மின்) தொடர்பு முனைகள் : குறைந்த அழுத்த மின்சுற்று வழியை உண்டாக்குவதற்கும் முறிப்பதற்கும் பயன்படும் இரிடியம், பிளாட்டினம் அல்லது உலோகக் கலவை எஃகினாலான சிறிய உலோகத் தகடுகள் அல்லது முனைகள்

contact print : தொடர்பு ஒளிப்படப் பதிப்பு : ஒளிப்படக் கலையில் எதிர்ப்படச் சுருளையும். படப் பதிவுக் காகிதத்தையும் நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு செய்து எடுக்கப்படும் ஒளிப்படப் பதிவுப் படம்

continental code: (மின்.) பெருங்கண்டக் குறியீடு : வானொலிச் செய்திகளை அனுப்புவதற்கு பயன்படும் புள்ளிகளும், கோடுகளும் அமைந்த தந்திக் குறியீடு

continuous beam : (க.க) தொடர் நிலை உத்தரம் : இரண்டுக்கு மேற்பட்ட ஆதாரங்களைத் தாங்குவதற்கான ஓர் உத்தரம்

continuos current : (மின்) தொடர் மின்னோட்டம்: துடிப்புகள் இல்லாத நேர்மின்னோட்டம்

continuous duty: (மின்) இடைவிடா மின்னோட்டம் : இடைவிடாமல் மின்னோட்டம் பாயுமாறு இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள மின்னோட்ட அமைப்பு

continuous Wave : (மின்.) இடையறா மின்னலை : விண்வெளியில் இடையறாது வீசப்படும் மின்னலை. இந்த அலை அனைத்தும் சம வீச்சளவிலும், கால இச்சு நெடுகிலும் சம இடைவெளியிலும் அமைந்திருக்கும்

contour : வடிவ விளிம்பு வரை : வார்ப்படத்தின் மேடுபள்ள மட்ட நிலை அடுக்கு

contour line : வடிவ விளிம்பு வரைக்கோடு : தள எல்லை வேறுபாடு குறித்த நிலப்படத்தில் மேடுபள்ளங் காட்டும் கோடுகள்

contraction : (வார்) இறுக்கம்; குளிர்விக்கும் போது கன அளவு சுருங்கி இறுக்கம் ஏற்படுதல்

contractor : (க.க) ஒப்பந்தக்காரர் : குறிப்பிட்ட வீதத்தின்படி வேலை செய்து அல்லது சரக்குகளைத் தருவித்துக் கொடுக்க ஒப்பந்தம் செய்து கொள்பவர்

contra-rotating propellers : (வான) எதிர் சுழல் விசிறிகள் : விமானத்தில் ஒன்று மற்றொன்றுக்கு எதிர் திசையில் சுழலும் விசிறிகள். இவை ஒன்றன்பின் ஒன்றாரு அமைந்திருக்கும்

contrast : வேறுபாட்டு முனைப்பு: இது தொலைக்காட்சிப் படங்களில் இருள் பகுதிக்கும் ஒளிப்பகுதிக்கு மிடையிலான விகித்தத்தைக் குறிக்கிறது. மிக அதிகமான வேறுபாட்டு முனைப்புடைய படம் மிக அடர்ந்த கருமை யினையும், பிரகாசமான வெண்மையினையும் கொண்டிருக்கும். குறைந்த வேறுபாட்டு முனைப்புடைய படங்கள் ஒட்டு மொத்தப் பழுப்பு நிறத் தோற்றமுடையதாக இருக்கும்