பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
185

control surface : (வானூ.) கட்டுப்பாட்டு மேற்பரப்பு : விமானத்தில், பறக்கும் உயரத்தை மாற்றுவதற்காக விமானியால் நிலை மாற்றம் செய்யக்கூடிய ஒரு நகரும் விமானக் காற்றழுத்தத் தளம்

controls : (வானூ.) கட்டுப்படுத்துக் கருவி : விமானத்தின் விசையையும், வேகத்தையும், பறக்கும் உயரத்தையும் கட்டுப்படுத்துவதற்காக அமைந்துள்ள கருவி

control system : (தானி.) கட்டுப்பாட்டு அமைப்பு : உந்து வண்டியில் அமைந்துள்ள இயக்குபிடி, எரிபொருள் கட்டுப்பாட்டுக் கருவி சுடர்ப்பொறிக் கட்டுப்பாடு, தடை நெம்புகோல், பல்லிணை மாற்று நெம்புகோல், கால்மிதி கட்டைகள் தடை அமைப்பு ஆகியவற்றை இது உள்ளடக்கும்

convection : (மின்.) உகைப்பியக்கம் : கூர்மையான மின்கடத்திகளி லிருந்து வெப்ப மின்னாற்றல்கள் தம்மால் இயக்கப்படும் அணுக்களின் இயக்கத்தினால் பரவுதல்

ஒரு திரவத்தின் அல்லது வாயுவின் வழியாக அதன் துகள்களின் இயக்கம் காரணமாக வெப்பம் பரவுதல்

convectorv (எந்.பொறி.) உகைப்பான் : உகைப்பியக்கத்தால் வெப்பமூட்டும் கருவி

convector : (குளி.ப.த.) உகைப்பியக்கி : வெப்ப மின்னாற்றல்கள் தம்மால் இயக்கப்படும் அணுக்களின் உகைப்பினால் பரவிவெப்ப மூட்டும் கருவி

convenience outlet (மின்.) தகவுப் புறவழி : மின்கம்பி இணைப்பில், சலவைப் பெட்டி, வாட்டு கரண்டி முதலிய கையடக்கச் சாதனங்களுக்கு மின்னோட்டம் எடுக்கப்படும் இடம்

converter : (மின்.) மின்மரி : இதனை மின்மாற்றி என்றும் அழைப்பர். இது மின்னோட்டத்தை ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றியமைக்கும் ஒரு பொறியமைவு

conversion hysteria: (உள.) நிலைமாற்ற மனக்கோளாறு : எதிர்மாறான வேட்கைகளுக்கிடையிலான முரண்பாடு காரணமாக ஏற்படும் ஒருவகை மனக்கோளாறு. இதில் ஒரு வகை மனக்கோளாறு, ஒரு வகை உடற்கோளாறு மூலம் வெளிப்படுகிறது. அதாவது, மனக்கோளாறு, ஒருவகை உடற்கோளாறாக மாறுகிறது

converter tube: (மின்.) ஒரு போக்கிக் குழாய் : ஒரு பல உறுப்பு வெற்றிடக் குழாயில் அல்லது டிரான்சிஸ்டரில் ஒரு சைகைகள் ஒன்றாகக் கலக்கப்பட்டு அல்லது ஒரு போக்கியாக்கப்பட்டு ஒர் இடைநிலை அலைவெண் உண்டாக்கப்படுகிறது. இதனை ஒரு போக்கிக் குழாய் என்பர்

convertible : (தானி. எந்.) மாற்றிக்கொள்ளக்கூடிய உந்து : இது பயணிகள் செல்லும் வகையைச் சேர்ந்த ஒரு உந்துவண்டி. இதன் மேல்மூடியை வேண்டும்போது முழுவதுமாக அகற்றிவிடலாம்; அல்லது கையினாலோ மின் விசையிலோ இயங்கக்கூடிய நீரியல் அமைப்பு மூலமாக மேல்மூடியை மேலே ஏற்றவோ, கீழே இறக்கவோ செய்யலாம்

convex: புறங்குவிக்த: ஒரு கோ ளத்தின் மேற்பரப்பினைப் போன்று புற வளைவுடைய

convey : அறிவி / ஆனுப்பு : செய்தியை அறிவித்தல்; கொண்டு செல்லுதல்

conveyors : செல் ஊர்தி : தொழிலகத்தில் தொழிற்படும் பொருள்களை வார்ப்பட்டைகள் வாயி