பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
191

வழியிலிருந்து உயர் அழுத்த மின்னோட்டம் கசிதல்

corona : (விண்.) ஒளி வட்டம் : சூரியனை அல்லது சந்திரனைச் சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம்

coronary arteries : (உட.) நெஞ்சுப்பைக் குருதி நாடி: நெஞ்சுப்பைத் தசைத்குக் குருதி வழங்கும் நாடி

coronary circula : (உட.) நெஞ்சுப்பைக் குருதியோட்டம்: நெஞ்சுப்பை சுற்றிய குருதியோட்டம்

corridor : (க.க) நடைக் கூடம்: இரண்டு அறைகளுக்கு இடையேயுள்ள இடைவழி நடைக்கூடம்

corosion : அரிமானம் : ஈரப்பதமான சூழலில் உலோகங்களுடன் ஆக்சிஜன் கலந்து உலோகங்களின் மீது துருப்பிடித்தல் அல்லது ஆக்சிகரணமாதல்

Corrosion resistant alloys : துருப்பிடிக்காத உலோகக் கலவை : இரும்பு, நிக்கல், கோபால்ட், செம்பு, சில சமயம் மாலிப்டினம். டங்ஸ்டன் இந்த வகையின் பாற்படும். இந்த உலோகக் கலவைகள் பல குறிப்பிட்ட நோக்கங்களுக்காக வாணிகப் பெயர்களுடன் விற்பனை செய்யப்படுகின்றன

corrugated board : (தாள்) மடிப்பு அட்டை : அட்டைத் தாளாகப் பயன்படும்படி மடிப்புச் சுருக்கம் செய்யப்பட்ட வைக்கோல் அட்டைத் தாள்

corrugated iron : நெளிவு இரும்புத் தகடு: வலிவு மிகும் பொருட்டு நெளி நெளியாக வளைக்கப்பட்ட இரும்புத் தகடு

corrundum : (எந்.பட்) கோரண்டம் : இது மிகக் கடினமான அலுமினியம் ஆக்சைடு ஆகும் போது ஓர் உராய்வுப் பொருளாகப் பயன்படுகிறது

cosine : (கணி.) கோணக் கிடக்கை: செங்கோண சாய்வரை மீது கோணமடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு

cosmic rays: (இயற்) மின்காந்த நுண்ணலைகள்: புறவெளியிலிருந்து வாயு மண்டலத்திற்கு உயர் ஆற்றல் ஊடுருவும் துகள்கள் அல்லது நுண்ணலைகள்

cotter: (எந்.) கவர்முள் கொளுவி: எந்திரப் பகுதிகளை இறுக்கும் முள் கொளுவி

cotter pin : (எந்) கடையாணி :

சுரையாணி கழன்று விடாமல் தடுப்பதற்கு ஒரு மரையாணியின் முனைகளின் அருகேயுள்ள ஒரு துவாரத்தினுள் செருகப்படும் ஒரு வகை ஆணி

cotton gin : பஞ்சு கடையும் பொறி : பஞ்சு வேறு கொட்டை வேறாக்கும் ஒரு வகை எந்திரம். இதனை 1793 இல் இலி விட்னி கண்டுபிடித்தார். இது பஞ்சாலைத் தொழில் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தது

cotton waste : கழிவுப் பஞ்சு : பஞ்சாலைகளிலிருந்து வெளியே தள்ளப்படும் கழிவுப்பஞ்சு. எந்திரங்களைத் துடைக்க இது பயன்படுகிறது

cotton wood : பஞ்சு மரம்: இது மென்மையான மரம். இது 15-23.மீ. வரை வளரும். 1.8 மீ வரை விட்டமுடையதாக இருக்கும். இது காகிதக்கூழ், பெட்டிகள் முதலியன செய்யப்பயன்படுகிறது