பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

16

பெரிதாக்கக்கூடிய துளைச் சீர்மி. மரையாணியை அல்லது திருகாணியை முடுக்குவதன் மூலம் துளைச் சீர்மி விரிவடைகிறது

adjustable resistance: (மின்.) சீரமைவு செய்யத்தக்க மின் தடை : இதனை மாறுபடும் மின்தடை என்றும் அழைப்பர். உயர்வை அல்லது குறைவை அனுமதிக்கக்கூடிய மின் தடை

adjustable speed motor: (மின்.) சீரமைவு செய்யத்தக்க வேக மின்னோடி : மிகுதியான அளவுக்கு வேகத்தை மாற்றியமைக்கக் கூடிய மின்னோடி. இதில் வேகத்தை ஒரு முறை சீரமைவு செய்துவிட்டால், பாரம் எத்துணை அளவு இருப்பினும், வேகம் ஒரே சீராக இருந்து வரும்

adjustable tap: (எந்.) சீரமைவு செய்யத்தக்க வடிகுழாய் : ஆரப்போக்கில் மாற்றியமைக்கக் கூடியவாறு அலகுகள் அல்லது செதுக்குக் கருவிகள் பொருத்தப்பட்ட வடி குழாய்

adjustable wrench: சீரமைவுத் திருகுக் குறடு : தக்கவாறு அமைத்துக் கொள்ளக்ககூடியதாகத் திறந்த வாயினைக் கொண்ட ஒரு திருகுக் குறடு

adjusting screw: (எந்.) சீரமைவு செய்யத்தக்க திருகாணி : ஒருவகை ரம்பப் பற்சாய்வுத் திருகாணி. இதனைப் பயன்படுத்தி, எந்திரங்களின் உறுப்புகளைப் பரிமாணங்களுக்குச் சரியமைவு செய்வதைவிட அதிகத் துல்லியமாகச் சீரமைவு செய்யவோ ஒழுங்கமைவு செய்யவோ முடியும்

adjustment: (எந்.) சீரமைவு: ஒரு பொறியின் அல்லது எந்திரத்தின் உறுப்புகளைப் பொருத்தமான நிலைகலில் சீராகப் பொருத்தி அமைத்தல்

adjustment strips: (எந்.) சீரமைவு உலோக வார்ப்பட்டைகள் : இந்த ஆப்பு வடிவ உலோக வார்ப்பட்டைகள் வாயிலாக, நழுவுமேற்பரப்புகளின் சரியான, தாங்கியினைச் சீரமைவு செய்யலாம். ரம்பப்பற்சாய்வுத் திருகாணிகளை அல்லது சீரமைவு செய்யத்தக்க திருகாணிகளைக் கொண்டு துல்லியமான இணைப்பினை ஏற்படுத்தமுடியும்

adman: (அச்சு.) விளம்பரக்காரர்: விளம்பரச்சாதனங்களைத் தயாரிப்பவர்

admittance: (மின்.) விடுப்புவிடை: மறிப்புக்கு நேர் எதிரானது. மாறுமின்னோட்டச் சுற்றுப் பாதைகளில் பயன்படும் ஓர் அலகு. இது ஓம்களில் அளவிடப்படுகிறது

adobe construction:(க.க.) உணக்கிய செங்கல் கட்டுமானம் : வெயிலில் காய்ந்த பச்சைக் செங்கல்லால் கட்டப்பட்ட புறச்சுவர்களைக் கொண்ட கட்டிடம். இந்தச் செங்கற்கள், மண்ணும் வைக்கோலும் கலந்த கலவையால் செய்யப்பட்டு வெயிலில் உணக்கியவையாகும்

adrenal glands: (உட.) குண்டிக்காய்ச் சுரப்பி : இவை சிறுநீரகத்தை அடுத்துள்ள சுரப்பிகள். இந்தச் சுரப்பியின் உட்பகுதியான உட்கருவிலிருந்து ஊறும் "அட்ரினலீன்" என்ப்படும் சுரப்பு நீர் இரத்தத்தில் பாய்ந்து, திடீர் அச்சம் அல்லது கோபத்தின்போது விரைவான இதயத் துடிப்பு, வெளுத்த முகம் போன்ற விளைவுகளை உண்டாக்குகிறது. இந்தச் சுரப்பியின் புறப்பகுதி உள்ளுறுப்பு மாறுதல்களை உண்டாக்குகிறது. பறவைகளிலும், மீன்களிலுமுள்ள இந்தச் சுரப்பிகள் முற்றிலும் வேறானவை

adulteration: கலப்படம்: மட்டமான அமைப்பான்களையோ