பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

221

அச்சு வார்ப்பில் வெட்டப்பட்ட ஒர் உலோகத் துண்டு.

(2) வண்ணத்துடன் அல்லது வண்ணமின்றி எழுத்துகள் புடைப்பாக இருக்குமாறு அச்சிடும் முறை.

die stock : (எந்.) அச்சு வார்ப்புக் குறடு : இழையூட்டு அச்சு வார்ப்புகளைக் கையால் இயக்கும்போது பயன்படுத்தப்படும் நெம்புகோல் அல்லது திருக்குக் குறடு.

dietatics : பத்திய உணவியல்: பத்திய உணவு பற்றிய உடல்நல இயல்.

differential (எந். பொறி) வேறுபாட்டு நுட்பம் : இயக்கும் இரு விசைகளின் வேறுபாட்டுக்கு ஒப்பான இயக்கமுடைய அமைவு. இந்த அமைவு உந்துவண்டிகளில் உள்ளது.

differential block : வேறுபட்ட இணைப்புத் தொகுதி: ஒரே இயக்கத்தை இருவேறு இயக்கமாகப் பிரித்தியக்குவிக்கும் இயக்க இணைப்புத் தொகுதி அமைவு.

differential calculus : (கணி.) வகையீட்டுக் கலனம் : இது கலன கணிதத்தின் ஒரு பகுதி. இதில் சார்பலன் கொடுக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து அதன் வகையீடு கண்டுபிடிக்கப்படுகிறது. இந்தக் கணித முறை, காலம், வீத அளவு, முடுக்கம், உச்ச நீச முதலியவை பற்றிய கணக்குகளில் பயன்படுத்தப்படுகிறது.

differential gearing : (தானி.எந்.) வகையீட்டுப் பல்லிணைப்பு: இது பல்லிணைப்பு ஏற்படுத்தும் ஒரு வகை முறை. இது ஒர் உந்து வண்டியில் ஒரு பின் சக்கரம் மற்ற தன் சார்பின்றி தனியாக நகர்வதற்கு அனுமதிக்கிறது. இதனால் டயர் அதிக அளவில் தேய்வது தடுக்கப்படுகிறது. எந்திரப் பகுதிகளின் மீதும் இதனால் அழுத்தம் குறைகிறது.

differential heating : (உலோ.) வகையீட்டு வெப்ப மூட்டல்: ஒரு பொருளின் பல்வேறு பகுதிகளும் வெவ்வேறு அளவுகளில் சூடாகுமாறு அதற்கு வெப்ப மூட்டுதல், இதனால், அந்தப் பொருளைக் குளிர்விக்கும் பொழுது வெவ்வேறு குண இயல்புகள் உண்டாகின்றன.

differential Indexing : ( எந்..) வகையீட்டுக் குறியீடு : துளையிடு எந்திரத்தில் வகையீடு செய்யும் போது, குறியீட்டுத் தகடு, வேலைப்பாடு செய்யப்படவேண்டிய பொருள் ஏற்றப்பட்டுள்ள கதிருடன் மாற்றுப் பல்லிணைகள் மூலமாக இணைக்கப்படுகிறது. இதனால், தகடும் பல்லிணைகளும் சுழன்று முறையாகக் குறியீடு செய்வதற்கு முடிகிறது.

differential motor (மின்.) வகையீட்டு மின்னோடி: இந்த வகை மின்னோடியில், கூட்டுச்சுருணை மின்னோடி அமைந்திருக்கும். இதில் தொடர் வரிசைகளும், இணைச் சுருள்களும் ஒன்றுக் கொன்று எதிர்மறையாக அமைந்திருக்கும்.

differential compounding : (மின்.) எதிர்மறைக் கூட்டு: வரிசையான சுருணைகள் இணைக்கப்பட்ட ஒரு கூட்டு மின்னோடி. இதில் காந்தப் புலங்கள், இணைத்சுருணைகளின் புலங்களுக்கு எதிராக இருக்கும்.

differentiate : வகைப்படுத்து / வேறுபடுத்து : வகை வேறுபாடு காணுதல்; வகைப்படுத்திக் கூறுதல்.

diffraction : (மின்.) ஒளிக்கதிர்ச் சிதைவு : ஒளிக்கதிர் நிறச்சிதைவு உண்டுபண்ணுதல்.