பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

diffuse: ஊடு பரவச்செய் : பரந்து விரிவுறச் செய்தல்: சிதறலுறச் செய்தல்; விரவிப் பரவச் செய்தல்

diffusion : (மின்.) சிதறிப் பரவுதல் : ஒரு திரவத்தில் செறிவில்லாத ஒரு பொருள் சிதறிப் பரவுதல், எடுத்துக்காட்டாக, நீரில் மையும், காற்றில் வாயுவும் விரவிப் பரவுகிறது

digest : (உட.) செரிமானம்: உணவின் சாரத்தை வயிற்றினுள் ஈர வெப்ப நிலைகளில், தக்கவாறு பக்குவம் செய்து செரிமானம் செய்தல்

digest : (குழை ) பக்குவமாக்கு : ஒரு பொருளைச் சூடாக்குதல், ஈரமாக்குதல், அழுத்தததிற்குட்படுததுதல் மூலம் மென்மையாக்குதல். தாவரப்_பொருள்களை அகற்றுவதற்கு இது பயன்படுகிறது

digester : செரிமானக்கலம் : மரத்துண்டுகளை அழுத்தத்தின் கீழ்வேதியியற் பொருட்களுடன் சேர்த்துச் சூடாக்கிச் செரிமானம் செய்து நுண்ணிழைகளாக மாற்றுவதற்குரிய ஒரு கொள்கலம்

digit : (கணி.) இலக்கம்: 0 முதல் 9 வரையுள்ள எண்களில் ஒன்று. இந்த எண்கள், தனியாகவும் இணைவாகவும் எண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன

digital computer : (விண்.) எண்மானக் கணிப்பொறி : அளவுகள் இலக்கங்களில் குறிப்பிடப்படும் கணிப்பொறி. இது ஏவுகனை பறக்கும் பாதை தொடர்பான சிக்கலான கணக்குகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுகிறது

digital signal : ( தானி.) எண்மானச் சைகை : கணிப்பதற்கும் கட்டுப்பாடுகள் செய்வதற்கும் பயன்படும் சைகை

dihedral angle: (வானு.) இருசமதள முக்கோணம்: இரு சமதள முகங்களிடைப்பட்ட கூர்ங்கோணம். விமானத்தில் ஒர் இறகுக்கும் கிடைமட்டத்திற்கு மிடையிலான கோணம்.இந்தக் கோணம், குறுக்காகக் காற்று வீசும்போது, கிடைமட்ட உறுதிப்பாட்டினை அதிகரிக்கிறது

dilate: விரிவாக்கு: பெரிதாக்குதல் விரிவாக்குதல்; அகலமாக்குதல்

diluent : (மர.வே.) நீர்ப்புப் பொருள் : கலவையின் செறிவைத் தளர்த்தும் பொருள். சாயங்களில் வண்ணமுனைப்புக் குறையச் செய்வதற்கு இது பயன்படுகிறது. வண்ணச் சாயங்களில் ஆளிவிதை எண்ணெயும், கற்பூரத் தைலமும், அவலரக்கில் ஆல்ககாலும், வ்ண்ணங்களில் கற்பூரத்தைலமும் நீர்ப்புப் பொருளாகப் பயன்படுத்தப்கின்றன

dilute : (வேதி.) நீர்த்தல் செய் : கலவையில் நீர்கலந்து செறிவு குன்றச் செய்தல்

dimension : பரிமாணம் : நீளம், அகலம், உயரம் அல்லது கனம் ஆகிய அளவுத் தொகுதிகளைக் காட்டும் உருவளவைக் கூறு

dimensional stability: (குழை.) பரிமாண உறுதிப்பாடு: ஒரு பிளாஸ்டிக் பொருள், குறிப்பிட்ட சூழ் நிலைகளில் குறிப்பிட்டகால அளவுக்குத் தனது துல்லியமான வடிவளவைப் பேணிக் காத்துக் கொள்ளும் திறன்

dimensioning : உருவளவைப்படுத்துதல் : உருவ வரைபடங்களில் பல்வேறு பகுதிகளின் வடிவளவுகளைக் குறிப்பிடுதல்.

dimension line :பரிமாணக் கோடு : பரிமாணம் எந்தப் பகுதியை அல்லது கோட்டினை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது