பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

E


e.m.f. (electro-motive force) (மின்.) மின்னியக்கு விசை : ஒரு மின் கடத்தியின் வழியாக மின்னோட்டத்தைத் தொடங்கி நிலைப் படுத்துகிற விசை; இதனைப் பொதுவாக "ஒல்ட்" என்னும்மின்னலகுகளில் கணக்கிடுவர்

ear : காதுப்புறம் : காது வடிவ விளிம்புப் பகுதியைக் குறிக்கும் மெத்தை - திண்டு ஒப்பனைச் சொல்

early warning radar : (விண்.) முன்னெச்சரிக்கை ராடார் : ஒரு பாதுகாப்புப் பகுதியை ஒரு விமானம் அணுகும்போது, அது பற்றி எச்சரிப்பதற்காக அப்பகுதியின் புறவிளிம்பு அருகே நிறுவப்பட்டிருக்கும் ஒரு ராடார் அமைப்பு

ear mark : அடையாளக் குறி : ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்குப் பயன்படுத்துவதற்கு ஒதுக்கி வைக்கப்பட்டத்தெனத் தனிப்பட இட அடையாளக் குறி

ear piece : (மின்.) செவிக்கருவி : தொலைபேசியில் கேட்போர் காதுப்புறமாக வைத்துக் கேட்பதற்குரிய செவிக் கருவி

ear phones : (மின்.) காதொலிக்கருவி : தொலைபேசியில் செவியுடன் பொருந்தத்தக்க ஒலிவாங்கும் கருவி

earth inductor compass : (வானூ.) நிலைக்கிளர் மின்னோட்டமானி : பூமியின் காந்தப் புலத்தில் சுழலும் ஒரு கம்பிச்சுருளில் உற்பத்தியான மின்னோட்டத்தின் அளவினைக் குறித்துக் காட்டும் கருவி

earth oxides : (மின்.) மண் ஆக்சைடுகள்: எலெக்ட்ரான்களை வெளிப்படுத்தும் பொருட்களாகப் பயன்படுத்தப்படும் பேரியம், ஸ்டிரான்ஷியம் போன்ற பொருள்கள்

earth pigment : (விண்.) மண் நிறமிகள் : மண்ணில் படிவுகளாகக் கிடைக்கும் நிறமிகள். இவற்றைச் சுரங்கம் தோண்டி எடுக்கிறார்கள்

earth satellite : (விண்.) பூமி செயற்கைக் கோள் : பூமியை ஒரு சுற்றுப்பாதையில் சுற்றிவரும் ஒரு கலம்

easel : நிலைச்சட்டம் : ஒவியர் பயன்படுத்தும் நிலைச் சட்டம்

easement : (க.க.) துணை விரிவுக் கட்டுமானம் : கைபிடிக் கிராதியின் அல்லது அடிப்பலகையின் வளைந்த பகுதி, படிக்கட்டுக் கட்டுமானத்தில், சுவரின் உட்புற நிலைக்கட்டும் சுவரின் அடித்தளமும் படிக்கட்டின் அடிப்புறத்தில் சந்திக்கும் இடத்திலுள்ள பளுக்குறைவான அல்லது முக்கோணப் பகுதி

eaves : (க.க.) இறவாரம் : கூரையின் பிதுக்க விளம்பு

eaves trough: (க.க.) இறவாறத்தொட்டி : மழைத்தண்ணிர் வடிவதற்குரிய ஒரு வாய்க்கால் அல்லது தொட்டி

ebonite : வன் கந்தகம் : கருநிறத் தொய்வகம் கலந்த கந்தகக் கலவை அல்லது கடினமான ரப்பர்