பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
245

ebonize : கருங்காலிக் கருமெருகு : கருங்காலி மரம் போன்று கருநிற மெருகேற்றுதல்

ebony : கருங்காலி மரம் : கடினமான, நெடுநாள் உழைக்ககூடிய கருநிறமான மரம். இது வெப்பமண்டலத்தில் வளரக்கூடியது. இது செதுக்கு வேலைகளுக்கும், பெட்டிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது

ebulator : (குளி.பத.) குளிர்திரவ இயக்கத் தடுப்பான் : ஒரு குளிர்பதனச் சாதனத்தில், குளிர்விக்கும் திரவமானது அதன் கொதி நிலையில் அல்லாமல் குறைந்த அழுத்தத்தில் இயங்காமல் இருப்பதைத் தடுப்பதற்காக அந்தச் சாதனத்தின் ஆவியாக்கக் குழாய்களில் செருகப்படும் ஒரு சாதனம்

ebullition : பொங்கழற்சி : நுரை பொங்கும் வகையில் கொதித்தெழுதல்

eccentric : (பொறி.) பிறழ்மையம் : சுழலியக்கத்தை முன்பின் அல்லது மேல்கீழான நேர் வரை இயக்கமாக மாற்றும் எந்திர அமைவு

பிறழ் மையம்

eccentric adjustment : (தானி.) பிறழ் மையச் சீரமைவு : பிறழ் மையமாகத் துளையிடப்பட்ட செருகுவகைக் கப்பியினைத் திருப்புவதன் மூலம் தொடர்புடைய உறுப்புகளைச் சீரான அமைப்பு நிலைக்குக் கொண்டுவருதல்

eccentric clamp : (உலோ.வே.) பிறழ்மையப் பற்றிரும்பு : பிறழ்மையத் தத்துவத்தின் அடிப்படையில் துரிதமாகச் செயற்படும் இறுகப் பற்றிக்கொள்ளும் ஒரு சாதனம்

eccentric fitting : (கம்.) பிறழ்மையப் பொருத்தி : மையக் கோடு எதிரீடாக இருக்கக் கூடிய ஒரு பொருத்தி

eccentric fluted reamer : (எந்.) பிறழ்மையத் துளைச்சீர்மி : உட்குழிவான செல்வழிகளில் அலம்பல்ஒலி கேட்காதவாறு ஒரே சீரான இடைவெளி கொண்ட ஒரு துளைச் சீர்மி. ஆனால், இது விட்டத்தை ஒரு நுண்ணளவியினால், அளப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருக்கும்

eccentricity : பிறழ்மையத் திறன் : இரு வட்டங்களின் மையங்கள். ஒன்றுக்கொன்று பிறழ்ந்திருக்கும் தன்மை

eccentric rod : (பொறி.) பிறழ்மையச் சலாகை : ஓரதர் எந்திர அமைவுடன் பிறழ்மையத்தை இணைக்கிற சலாகை

eccentric starp : (பொறி.) பிறழ்மையப் பட்டை : பிறழ் மையப் பள்ளத்தைச் சுற்றியுள்ள உலோகவளையம் அல்லது கலம். இது, நீராவி எஞ்சினிலுள்ள சலாகைகளுக்கு ஓரதர் பல்லிணைக்கும் இயக்கத்தைக் கொண்டு செல்கிறது

eccentric turning : (எந்.) பிறழ்மையச் சுழற்சி : அச்சுடன் பொது மையங் கொண்டிராத கடைசல் சுழற்சிப் பணி

echinus : (க.க.) புறங்கவி ஆதாரம் : தூண் தலைப்பின் மேல்மட்டத்தைத் தாங்கும் புறங்கவிவான முட்டை வடிவ அடிப்பகுதி

echo : (மின்.) எதிரொலி : ஒலி பரப்பீட்டின்போது ஒரு குறுகிய இடைவெளியில் அந்த அலை எதிரொலியாக மீண்டு வந்து ஒலித்தல்

echo box : (மின்.) எதிரொலிப் பெட்டி : ஒலிபரப்புவதில்