பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

செயற்கை எதிரொலிகளை உண்டாக்குவதற்குப் பயன்படும் உட்குழிவான அல்லது குழாய் போன்ற சாதனம்

ecliptic : (விண்.) கோள வீதி : சூரியனைச் சுற்றி பூமிக்கோளம் வலம் வரும் தளப்பரப்பு. இதனை அடிப்படையாகக் கொண்டே மற்றக் கோளங்களுக்கு இடையிலான சுற்றுப்பாதைகள் கணக்கிடப்படுகின்றன

economic : பொருளியல் : நிதியியல் அல்லது செல்வம், வளமான வாழ்க்கை வழிமுறைகள் தொடர்பானவை

economic speed : (வானூ.) சிக்கன வேகம் : எரிபொருள் மிகக் குறைவாகச் செலவழிகிற வேக அளவு

economizer : (பொறி.) சிக்கனக் கருவி : வெப்பம்-எரிபொருள் முதலியவற்றை மிச்சப்படுத்துவதற்கான எந்திர அமைவு

economy coil: (மின்.) சிக்கனக்கம்பிச் சுருள் : தூண்டு சுருளும் மின்மாற்றியும் ஒருங்கிணைந்த அமைப்பு. இது மாற்று மின்னோட்டத்துடன் பயன்படுத்தப்படுகிறது

eddy currents : (மின்.) சுழல் மின்னோட்டம் : ஒரு காந்தப் புலத்தில் ஒரு திடமான உலோகப் பொருளைச்சுழற்றும்போது உண்டாகும் தூண்டு மின்னோட்டம். இதற்குப் பெருமளவு எரியாற்றல் தேவைப்படும். பல சமயங்கள் தீங்கு விளைக்கும் வெப்ப உயர்வு ஏற்படும்

eddy current loss : (மின்.) சுழல்மின்னோட்ட இழப்பீடு : உள்ளீட்டுத் தடையின் வழியே பாயும் சுழல் மின்னோட்டத்தினால் உண்டாகும் வெப்ப இழப்பு

edged tools : வெட்டுக் கருவிகள் : கூர் விளிம்புடைய வெட்டுக் கருவிகள்

edge flare : விளிம்புச் சுடர் : தொலைக் காட்சியில் படத்தின் விளிம்பினைச் சுற்றி மின்னிடும் சுடரொளி

edging machine : (உலோ.) விளிம்பமைப்புக் கருவி : உலோகத் தகடுகளின் விளிம்புகளை மடக்குவதற்குப் பயன்படும் கருவி

edging trowel : விளிம்புச் சட்டுவம் : ஒரு செவ்வக வடிவச் சட்டுவக் கரணடி. இதில் ஒரு புற விளிம்பு கீழ்நோக்கித் திரும்பியிருக்கும். இது மேடைகளின் விளிம்புகளையும் வளைவுகளையும் அமைக்க உதவுகிறது

edifice : (க.க.) மாளிகை : ஒரு பெரிய கட்டிடம். சிறப்பான கட்டிடக் கலை வேலைப்பாடுகளுள்ள ஒரு பெருஞ் செயற் கட்டமமைவு

Edison cell : (மின்.) எடிசன் மின்கலம் : நிக்கல் ஆக்சைடை நேர்மின் முனையாகவும், இரும்புத்தூளை எதிர்மின் முனையாகவும் பயன்படுத்தும் மின்கலம். இதில் மின்பகுப்புக் கரைசலாக நீர்த்த சோடியம் ஹைடிராக்சைடுக் கரைசல் பயன்படுத்தப்படுகிறது

Edison effect : (மின்.) எடிசன் விளைவு : ஒரு வெற்றிடக் குழாயில் ஒரு நேர்மின் தகட்டை நோக்கி எலெக்ட்ரான்கள் ஈர்க்கப்படும் விளைவு. இந்த விளைவினை முதன்முதலில் கண்டறிந்தவர் தாமஸ் எடிசன்

Edison socket : (மின்.) எடிசன் குதை குழி : திருகு வகை ஆதாரமுடைய ஒர் ஒளிக்குழலை ஏற்கிற குதை குழி

Edison storage battery : (மின்.) எடிசன் மின்சேமக்கலம் : உந்து