பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
259

equalizing current : (மின்.) சமன்படுத்தி மின்னோட்டம் : மின் உற்பத்தியைச் சமன்படுத்துவதற்கு இணையாக இணைக்கப்பட்டுள்ள இரு கூட்டு மின்னாக்கிகளுக்கிடையில் ஓடும் மின்னோட்டம்

equation : (கணி.) சமன்பாடு : கணிதத்தில், இரு அளவுகளின் சமன்மையைக் குறிக்கும் சமன்பாடு. வேதியியலில் வேதியியல் வினைகளைக் குறியீடுகளாகக் குறித்தல்

equilibrator : சமநிலைப்படுத்தி : சமநிலையை ஏற்படுத்தும் ஒரு சாதனம்

equilibrium : (இயற்.) சமநிலை : சரியமைதி நிலை

equivalent : சம மதிப்புகள் : எண்ணிக்கையில் ஒன்றுக்கொன்று சரிசமமாகவுள்ள, ஆனால் வெவ்வேறு வகையில் குறிக்கப்படும் எண்கள் அல்லது அளவுகள்

equivalent evaporation : (பொறி.) சரிநிகர் ஆவியாதல் : ஒரு கொதிகலனுக்கு212°ஃபா. சூடான் நீர் வந்து, அது அதனை அதே வெப்ப நிலையிலும், வாயுமண்டல அழுத்தத்திலும் ஆவியாக்குமானால், ஒரு மணிநேரத்தில் ஆவியாகக் கூடிய நீரின் அளவு

equivalent monoplane : (வானூ.) சரிநிகர் ஒற்றைத் தட்டு விமானம் : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறகுகளின் எதற்கும் பொருட்களைத் தூக்குவதற்குச் சரிநிகரான ஒற்றைத் தொகுதிச் சிறகுகளையுடைய விமானம்

equivalent weights of paper : (அச்சு.) சரிநிகர் எடைமானங்கள் : ஒரே அடிப்படையான எடையுள்ள ஆனால், வேறுபட்ட வடிவளவு காரணமாக வேறுபட்ட கட்டு (ரீம்) எடை கொண்ட பல்வேறுவகைக் காகிதங்களின் எடைமானங்கள்

erecting : நிறுவுதல் : எந்திரங்களின் பல்வேறு உறுப்புகளை ஒருங்கிணைத்துப் பொருத்தி இறுதியாக நிறுவுதல்

erosion : (மண்.) அரிமானம் : மழை, வெப்பம், குளிர்காற்று முதலிய இயற்கையாற்றல்களால் பாறைகள் அடையும் அரிப்புத் தேய்மான அழிவு

errata : (அச்சு.) அச்சுப்பிழைகள் : அச்சுப்பிழைத் தொகுப்புப் பட்டியல்

escalator : இயங்கு படிக்கட்டு : பண்டக சாலைகள், ரயில் நிலையங்கள் முதலியவற்றில் பயன்படுத்தப்படும் இயங்கும் படிக்கட்டு

escalop shell : சிப்பியணிகலன் : ஈரிதழ்த் தோடுடைய நத்தைச் சிப்பியினாலான அணிகலன்

escapement : இயக்க மாற்றி : கடிகாரங்களில் செங்குத்து இயக்கத்தை எதிரீட்டு இயக்கமாக மாற்றுகிற ஒரு சாதனம். இது கடிகாரங்களில் ஒரு சீரான இயக்கம் நடைபெற வழிசெய்கிறது

escape velocity : (விண்.) வெளிச்செல் வேகம் : ஒரு பொருள் பூமியின் ஈர்ப்புப் புலத்திலிருந்து விடுபட்டு விண்வெளிக்குச் செல்வதற்குத் தேவையான வேக அளவ.

escritoire : சாய்வு மேசை : தாள் எழுதுகோல் முதலிய பொருள்களை வைக்க உதவும் இழுப்பு அறைகளுள்ள சாய்வான எழுது மேசை

esparto paper : எஸ்பார்ட்டோ தாள் : ஸ்பெயின் ஆஃப்ரிக்கா ஆகிய பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 'எஸ்பார்ட்டோ' என்னும் புல்வகையிலிருந்து தயாரிக்கப்படும் தாள்