பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
265
F


fabricate : (குழை.) உருவாக்கம் : ஏதேனும் உற்பத்தி முறையின் மூலம் அல்லது பல உற்பத்தி முறைகளை ஒருங்கிணைத்து பிளாஸ்டிக்கைப் பொருட்களாக உருவாக்குதல்

fabrication : (பொறி.) உருவாக்கம் செய்தல் : பல பொருட்களை ஒன்றாக இணைத்து உருவாக்கம் செய்தல். உதாரணமாக, ஒரு கப்பலை அல்லது ஒரு பாலத்தை உருவாக்குதல்

fabric universal joint : (தானி.) பொதுமுறைக் கட்டிணைப்பு மூட்டு : இது குறுகிய சுழல் தண்டுகளுக்கும், நெருக்கமான கண்டங்களின் இணைப்புக்கும் மிகவும் ஏற்புடையது. எனினும், சிலசமயம் இது அனுப்பீட்டு அச்சுக்கும் மின்அச்சுக்குமிடையிலும் பயன்படுத்தப்படுகிறது

facade : (க.க.) கட்டிட முகப்பு : ஒரு கட்டிடத்தின் முகப்புத்தோற்றம் அல்லது புறத்தோற்றம்

face : (எந்.) முகப்பு : (1) மெருகேற்றப்படும் வார்ப்படத்தின் முகப்பு (2) பல்லிணைச் சக்கரத்தின் முகப்பு, அதன் பல்லின் அகலத்தைக் காட்டும்; (3) கப்பி வார்ப் பட்டையின் முகப்பு; (4) வெளி விளிம்பின் அகலம்; (5) அச்சுருவின் எழுத்து வடிவப் பாணி; (6) கடைசல் மையங்களுக்கிடையிலான முகப்பு முனை

facebrick : (க.க.) முகப்புச் செங்கல் : சுவர்களின் எடுப்பான் பகுதிகளுக்குப் பயன்படுத்தப்படும் உயர்தரமான செங்கல்

face hammer : (க.க.) முகப்புச் சுத்தி : கரடுமுரடான கற்செதுக்கு வேலைகளுக்குப் பயன்படும் சுத்தி. இதில் ஒரு முனை மொட்டையாகவும், இன்னொரு முனை வெட்டு முனையாகவும் இருக்கும்

face lathe : (எந்.) முகப்புக் கடைசல் எந்திரம் : பெரிய, தட்டையான மேற்பரப்புகளை எந்திரத்தால் உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள குறுகிய படுகையுள்ள ஆழ்ந்த இடைவெளியுள்ள எந்திரம்

face mark : (மர.வே.) முகப்புக்குறி : வேலைப்பாடு செய்யப்படும் மரத்துண்டின் ஒரு பரப்பின் மீது பொறிக்கப்படும் குறி. இந்த அடையாளக் குறியினைக் கொண்டு, அதனை முகப்பு என அறிந்து, அதிலிருந்து மற்ற முகப்புகள் உருவாக்கப்படும்

face mould :(க.க.) முகப்பு வார்ப்படம் : சாய்ந்து செல்லும் கைபிடிக்கிராதியின் மேற்பகுதியின் உண்மையான பரிமாணத்தைக் காட்டும்

face plate or face chuck : முகப்புத் தகடு அல்லது முகப்பு ஏந்தமைவு : ஒரு கடைசல் எந்திரத்

முகப்பு ஏந்தமைவு