பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
277

fire proof : தீத்தடைக் காப்பு : நெருப்பினால் பாதிக்கப்படாமலிருக்கச் செய்யப்படும் தீத்தடைக் காப்பு.

fire screen : தீத்தடைத்திரை : வெப்பத்தைத் தடுக்கும் தீயின் திரை

fire wall : (வானூ.) தீத்தடுப்புச் சுவர் : எஞ்சின் அறையில் தீயைத் தடுப்பதற்கான தடுப்புச் சுவர்

firing : வெப்பூட்டுதல் : மண் பாண்டங்களை சூளையிலிட்டுச் சூடாக்கி வலிமையூட்டுதல்

firing chamber : (விண்.) எரியூட்டு அறை : ஒரு ராக்கெட் எஞ்சினில் அல்லது மின்னோடியில், எரிபொருளும், ஆக்சிகரணியும் எரியூட்டப்பட்டு, போதிய அளவு உந்து ஆற்றலை அளிக்கும் அளவுக்கு வாயுவின் அழுத்தத்தைப் பெருக்குவதற்குரிய ஓர் அறை

firing order : (தானி.) வெடிப்பு வரிசை : பன்முக நீள்உருளை வாயு எஞ்சின்களில் வெடிப்புத் தொடர் வரிசை

firm joint caliper : (எந்.) அசையா இணைப்பு இடுக்கியளவி : இரு கால்களும் அசையாத பெரிய இணைப்புமூலம் பிணைக்கப்பட்டுள்ள சாதாரண இடுக்கியளவி

first class lever : (எந்.) முதல் தர நெம்புகோல் : விசைக்கும் எடைக்கு நடுவில் ஆதாரம் உள்ள ஒரு நெம்புகோல்

first gear : (தானி.) முதற் பல்லிணை : மிகக் குறைந்த வேகத்தில் செல்லப் பயன்படும் பல்லிணை இணைப்பு. இதனைத் தாழ் பல்லிணை என்றும் கூறுவர்

fished joint : (மர.வே.) கொக்கிப் பிணைப்பு : கொண்டை ஆணி போன்ற உறுப்புகளை நீட்சியுறச் செய்வதற்காக அதன் நெடுக்குவாக்கிற்கு எதிராக ஓர் உபரித்துண்டு பிணைக்கப்படுகிறது. இவ்விரு துண்டுகளும் ஒருங்கிணைந்த பிணைப்பு. எதிர்ப் பக்கங்களில் ஆணி அடித்திறுக்கப்படுகிறது. அல்லது மரையாணியால் முறுக்கப்படுகிறது

fish eye : (குழை.) மீன் கண் : ஒளி புகும் அல்லது ஒளியுருவலான பிளாஸ்டிக்கில், பொதிந்துள்ள பொருளுடன் முழுமையாக இணையாத காரணத்தினால் உள்ள சிறிய கோள வடிவ உருண்டை

fish glue : மீன் பசை : மீன் வகைகளினின்றும் கிடைக்கிற பசை செய்ய உதவும் வெண்மையான நுங்கு போன்ற பொருள்

fishing : (மின்.) கொக்கிழுப்பு : மின் கடத்திகளை வெளியில் எடுப்பதற்காக ஒரு வடிகாலிலிருந்து இன்னொரு வடிகாலுக்கு தனியொரு கம்பிவடம் முதலியவற்றை இழுப்பதற்குப் பயன்படும் முறை

fish oils : மீன் எண்ணெய்கள் : உலராத, வெறுப்பூட்டும் நெடியுடைய எண்ணெய் வகைகள். இவை, மீன் வகைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெய்கள் வெப்பந்தாங்கும் பொருளாகவும், மசகுப் பொருளாகவும் பயன்படுகின்றன

fish plate : (எந்.) இணைப்புக் கட்டை : தண்டவாளங்களை இணைக்கும் இருப்புக் கட்டை

இணைப்புக் கட்டை

fish tail : (வானூ.) மீன் வால் துடுப்பு : விமானத்தில் மீன் வால் போன்ற வடிவுடைய துடுப்பு அமைப்பு. விமானம் தரையிறங்குவதற்கு தரையை அணுகும்போது வேகத்தைக் குறைப்பதற்குப் பயன்படுகிறது