பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தடுக்கும் சாதனமாகச் செயற்படும் வகையில் அமைக்கப்பட்ட காற்றடைக்கப்பட்ட ஒர் உருளை

air-dried: காற்றில் உலர்ந்த: சூட்டடுப்பிலிட்டு உலர்த்துவதற்கு மாற்றாக காற்றில் உலரவிடுவதன் மூலம் வெட்டு மரங்களைப் பக்குவப்படுத்துதல்

air drill: (எந்.) காற்றுத் துரப்பணம்: அழுத்தப்பட்ட காற்றின் வாயிலாக இயக்கப்படும் ஒரு துரப்பணம்

air duct: (வானூ.) காற்றுக்குழாய்: காற்றைவிடப் பளு குறைந்த வான் கூண்டின் (வான் கலம்) காற்றடைத்த உறுப்புகளில் காற்றை நிரப்புவதற்கு அல்லது அவற்றில் காற்றழுத்தத்தைப் பேணுவதற்குக் காற்றினை வழங்குகிற ஒரு குழாய். இது பெரும்பாலும் கட்டிணைப்புப் பொருளாக இருக்கும்

air flow: (தானி.எந்.) காற்றுப்பாய்வு: காற்று உராய்வு மிகக் குறைந்த அளவுக்குதக் குறைக்கப்பட்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சிலவகைத் தானியங்கிகளின் மீது காற்றுப் பாய்ந்து செல்வதைக் குறிக்கிறது

airfoil: (வானூ.) காற்றுத்துருத்தி: பயனுள்ள இயக்க எதிர்வினையை உண்டாக்கும் வகையில் காற்றில் துருத்திக் கொண்டிருக்குமாறு வடி வமைக்கப்பட்டுள்ள மேற்பரப்பு

airfoil profiles: (வானூ.) காற்றுத் துருத்தி வடிவம்: ஒரு காற்றுத் துருத்திப்பகுதியின் பக்கத்தோற்ற உருவரைப் படிவம்

airfoil section: (வானூ.) காற்றுத் துருத்திப் பகுதி: குறித்துரைக்கப்பட்ட ஒரு சமதளத்திற்கு நேரிணையாக ஒரு வானூர்தியால் ஏற்படுத்தப்பட்ட காற்றுத் துருத்தியின் குறுக்கு வெட்டுத் தோற்றம். இந்தச் சமதளத்திற்குச் செங்குத்தாக உள்ள ஒரு கோடு காற்றுத் துருத்தி அச்சு எனப்படும்

airframe: (விண்.) காற்றுச் சட்டகம்: ஒரு விமானத்தின் அல்லது ஏவுகணையின் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுமான மற்றும் வளியியக்கம் சார்ந்த அமைப்பான்கள். இவை அந்த விமானத்துடன் அல்லது ஏவுகணையுடன் இணைந்த பல்வேறு அமைப்புகளுக்கும் ஆதாரமாக இருக்கின்றன

air-fuel ratio: ( தானி.) காற்று எரிபொருள் விகிதம்: உள்ளெரி எஞ்சினுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருள் கலவையில் பெட்ரோலும், காற்றும் எந்த அளவுகளில் கலந்திருக்க வேண்டுமோ அந்த அளவுகளின் விகிதம் (அவற்றின் எடையின் அளவுகளில்) எடை விகிதம் — 15 : 1 கன அளவு விகிதம் -9600 : 1

air furnace: (வார்.) காற்று உலை: நெகிழ்வு இரும்பு வார்ப் படங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படக்கூடிய ஒரு வகை உலை.

air glow: காற்றுப் பிறங்கொளி: மேல்வாயுமண்டலத்தில் ஏற்படும் இயற்பியல்-வேதியியல் வினைகள் காரணமாக எழும் காற்றுத் தூசியிலிருந்து வெளிப்படும் மங்கலான ஒளி

air gap: (மின்) காற்று இடைவெளி: முற்றிலும் காற்று நிறைந்துள்ள ஒரு சுற்றோட்டத்தில் உள்ள ஒர் இடைவெளி. ஒரு மின்விசைப் பொறியிலுள்ள ஒரு காற்று இடைவெளியைப் போன்றது

air gap: (மின்.) காற்று இடைவெளி நெறி: உந்து பொறி-உள் வெப்பாலைகளில் அனற்பொறியூட்டும் அமைவுகளிடையிலான காற்று இடைவெளி;மின்பேராற்றலைக் கட்டுப்படுத்தும் துணையாற்