பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

291

foot candle : (மின்.) ஓரடி மெழுகுவர்த்தித் திறன் : தரத் திட்ட அளவுடைய ஒரு மெழுகுவர்த்தி ஓரடி தூரத்திலிருந்து உண்டாக்கும் ஒளியின் அளவு

footing : (க.க.) காலடி ஆதாரம் : துணுக்கு உள்ளது போன்ற அடித் தளம்

foot lever : அடியாதார நெம்பு கோல் : காலடி ஆதாரத்தின் அழுத்தத்தினால் மிட்டுமே செயற்படும் ஒரு நெம்புகோல்

foot note : (அச்சு.) அடிக்குறிப்பு : புத்தகத்தின் ஒரு பக்கத்தில் அடிப்புறத்தில் அச்சிடப்படும் விளக்கக் குறிப்பு

foot pound : (இயற்.) வேலை அலகு : ஒரு கல் எடையுள்ள பொருளை ஓரடி உயர்த்துவதற்குத் தேவையான ஆற்றல் அலகு

foot selector switch : (தானி.) காலடித் தெரிவு விசை : முகப்பு வெளிச்சத்தின் அளவினை கூட்டவும் குறைக்கவும் பயன்படும் காலடியிலுள்ள விசை

footstep or footstep bearing : (எந்.) காலடித் தாங்கி : ஒரு செங்குத்தான சுழல் தண்டின் அல்லது கதிரின் கீழ்முனையில் இறுதி அழுத்தத்தைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு தாங்கி

foot switch : (தானி;மின்.) காலடி விசை : காலழுத்தத்தின் மூலம் இயக்கப்படும் ஒரு மின் விசை. உந்து வண்டியில் தளப் பலகைகளில் பொருத்தப்பட்டுள்ள முகப்பு விளக்கினைக் கட்டுப்படுத்தும் விசை இதற்குச் சான்று

forbidden region : (மின்.) தடை மண்டலம் : ஓர் அணுவின் இணை திறனுக்கும், கடப்புப் பட்டைக்கும் இடையிலான ஒரு பகுதி

force : (எந்:இயற்.) விசையாற்றல் : ஒரு பொருள் நிலையாக இருக்கும்போது அல்லது இயங்கும் போது அதன்மீது செயற்பட்டு அதன் நிலையை மாற்றுகிற அல லது மாற்ற-முனைகிற ஆற்றல், இதற்குத் திசை, பயன்படுத்தப்படும் இடம், பரிமாணம் என மூன்று பண்பியல்புகள் உண்டு

force feed lubricators : (தானி; எந்.) விசையூட்டு உயவிடுவான்கள் : மூழ்குவது போன்ற இயக்கத்துடன் செயற்படும் எந்திர உறுப்புகளின் அமைப்பு முறை. இந்த உறுப்புகள், இயக்கும் சக்கரத்தின் சுற்றுவட்டம் கடந்த முனைப்புடைய சுழல்தண்டில் மேலும் கீழும் சென்று இயங்கும்

force feed of oil : (தானி; எந்.) எண்ணெய் விசையூட்டல் : விசையூட்டு என்பது ஒரு வகை உயவிடு அமைப்பு முறை. இதில் பிரதான தாங்கிகள், சலாகைத் தாங்கிகள், உந்துதண்டுத் தாங்கிகள் போன்றவற்றுக்கு விசையூட்டு மூலம் எண்ணெயைச் செலுத்துகிறது. இந்த மூன்றுக்கும் எண்ணெய் செலுத்தப்படும்போது முழு விசையூட்டு முறை எனப்படும்

force fit : (எந்.) விசைப் பொருத்தி : விசை மூலம் செய்யப்படும் பொருத்திணைப்பு. இதன் விளைவாக உறுப்புகள் ஒரு தனி அலகு போல் தோன்றுமாறு பொருந்த இணைக்கப்படுகின்றன

force plate : (குழை.) விசைத் தட்டம் : வார்ப்படத்தின் மூழ்கு அல்லது விசை முளை, செலுத்துச் செருகிகள், அல்லது செருகு காப்பிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள தட்டம். இது பெரும்பாலும் நீராவி அல்லது நீர்க் குழாய்களுக்காகத் துரப்பணம் செய்யப்படுவதால், இதனை 'நீராவித் தட்டம்' என்றும் அழைப்பர்