பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

force plug : (குழை.) விசைச் செருகி : வார்ப்படக் குழி அச்சினுள் நுழைந்து வார்ப்புப் பொருளுக்கு அழுத்தம் கொடுக்கும் வார்ப்படத்தின் பகுதி. இதனை மூழ்குதண்டு அல்லது உந்து தண்டு என்றும கூறுவர்

force pump : (எந்.) விசை இறைப்பி : ஒரு வெற்றிடத்திற்கு எதிராக வாயு மண்டல அழுத்தம் செயற்படுவதன் காரணமாக ஏற்படும் விசையினால் நீர் இறைக்கும் சாதனம்

forecooler : (குளி;பத.) முன் குளிர்விப்பான் : குளிர்பதன சாதனத்தில் பயன்படுத்துவதற்கு முன்னர் நீரைக் குளிர்விப்பதற்கான ஒரு சாதனம்

forging : (உலோ.) உலோக வடிவாக்கம் : உலோகங்களைக் காய்ச்சி அடித்து, வளைத்து இழுத்து தகடாக்கிக் குறிப்பிட்ட வடிவத்தில் உருவாக்குதல்

foreign matter : (குழை.) புறப்பொருள் : ஒரு பிளாஸ்டிக் பொருளில், அதன் சராசரி அமைப்பான் களிலிருந்து வேறுபட்டதாகத் தோன்றும் பொருளின் துகள்கள்

foreman : மேன்முறையாள் : வேலை செய்து கொண்டே பிற தொழிலாளர்களைக் கண்காணிக்கும் பொறுப்புடைய ஒரு குழுமத்தின் பொறுப்பாளர்

fore plane ; (மர;வே.) முதற்படி இழைப்புளி : வெட்டியபின் அல்லது அறுத்தபின் முதல்தள மட்டம் செய்யப் பயன்படும் கருவி

fore shortened : தொலைக் குறுக்க நோக்குப்பட வரைவு : தொலைக் காட்சியினால் குறுக்கப்பட்டது போன்று தோற்றுவிக்கும் வகையில் வரையப்பட்ட படம்

forge : (1) கொல்லுவேலை : கொல்லுலையில் உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்குதல்

(2) உலைக்களம் : கொல்லரின் உலைக்களத்தில் தீ மூட்டும் துருத்தியுள்ள இரும்பினாலான அல்லது செங்கல்லினாலான கொல்லுலை

forge welding : உலைப்பற்ற வைப்பு : பற்ற வைக்க வேண்டிய உறுப்புகளை உலையில் தகுந்த வெப்பநிலைக்குச் சூடாக்கி அழுத்தம் செலுத்தி அல்லது அடித்துப் பற்றவைக்கும் முறை

forging brass : (உலோ.) உருக்குப் பித்தளை : செம்பு, துத்தநாகத் துடன் சிறிதளவு வெள்ளியமும், ஈயமும் கலந்த உலோகக் கலவை. இது வார்ப்பட உலைகளில் பயன்படுகிறது

forging press : (எந்.) உலையழுத்தக் கருவி : வார்ப்பட உலையில் தேவைப்படும் அழுத்தம் செலுத்துவதற்குப் பயன்படும் எந்திரம்

forgings : உலை வார்ப்புகள் : சுத்தியால் அடித்து வடிவாக்கம் செய்யப்பட்ட உலோகத் துண்டுகள்

'forked canter : (எந்.) கவர் மையம் : கூம்புடைய அல்லது நீண்ட பிடியுடைய கரண்டி. இது 'V' வடிவத் தலையும் உடையது. இது துரப்பணம் போன்ற நட வடிக்கைகளில் நீள் உருளை வடிவப் பொருட்களை நிலையில் பிடித்துக் கொள்ளப் பயன்படுகிறது

கவர் மையம்

form : உருப்படிவம்/அச்சுருப்படிவம் : (1) வார்ப்படம் தயாரிப்பதற்காக ஒரு தோரணியில் சாந்து ஊற்றுவதற்கான ஒரு கலம்