பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

gear-shift lever : (தானி) பல்லிணை மாற்று நெம்புகோல்: மாற்று வேகப் பல்லிணைகளை மாற்றுவதற்கான ஒரு நெம்புகோல்

gear stocking cutter : (பல்லி.) பல்லிணை வெட்டி: விரைவான உற்பத்திக்கும், துல்லியமான வெட்டுதலுக்கும் இயல்விக்கக் கூடிய பல்லிணைப் பற்களை வெட்டுவதற்கான கருவி

gear-tooth caliper : (எந்) பல்லிணை திட்பமானி : பல்லிணைப் பல்லின் கனத்தையும் ஆழத்தை அளவிடுவதற்குப் பயன்படும் வெர்னியர் வகைத் திட்பமானி

gear train : (எந்) பல்லிணைத் தொகுதி: இயங்கும் உறுப்புகளையும் இயக்கப்படும் உறுப்புகளையும் இணைக்கின்ற ஒன்று,அதற்கு மேற்பட்ட பல்லிணைகளின் தொகுதி

geiger counter : (இயற்) கதிரியக்கக் கண்டுபிடிப்புக் கருவி : கதிரியக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கான ஒருவகை வாயு நிரப்பப்பட்ட ஒரு மின்னியல் சாதனம்

gel : (வேதி. குழை.) அரைத் திண்மக் கரைசல் : கூழ்ப் போலியான அரைத்திண்மக் கரைசல். இது ஒளி ஊடுருவக் கூடியது

gelatin : (வேதி.) ஊன்பசை : எலும்பு தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு, உணவுப் பொருள் துறையிலும், ஒளிப்படத் தகடுகளிலும், பசைகளிலும் பயன்படுத்தப்படும் கூழ் போன்ற பொருள்

gelation : (குழை.) கெட்டியாக்குதல் : திரவ பிளாஸ்டிக்கை உறைய வைத்துக் கெட்டியாக்கும் முறை. இதில் திரவ நிலையிலுள்ள பிசினில் மூலக்கூறுகள் ஊன்பசையாகி பின் கெட்டியாகிறது

geltime : (குழை.) அரைத்திண்ம நேரம் : பிசினின் இயைபூக்கத்திற்கும், தொடக்க நிலைக் கெட்டிமத்திற்குமிடையிலான இடைவெளி நேரம்

genelite: (உலோ.) ஜெனலைட்டு: வெண்கல உலோகக் கலவை. இதில் 40% கன அளவுக்கு காரீயகக் கனிமப் பொருள் கலந்திருக்கும். இது எண்ணெயை ஈர்த்துக் கொள்ளும் தன்மையுடையது

general drawing : பொது வரைபடம் : எந்திரத்தின் அல்லது பிற பொருள்களின் அமைப்பினைக் காட்டும் வரைபடத்தை வீத அளவுப்படி வரைதல். இதில் எந்திரத்தில் உறுப்புகள் ஒன்றோடொன்று கொண்டுள்ள தொடர்பும், அவை அமைந்திருக்கும் இடமும் குறிக்கப்பட்டிருக்கும். இதனை ஒருங்கிணைப்பு வரைப்டம் என்றும் கூறுவர்

generator : (மின்) மின்னாக்கி: எந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் எந்திரங்களைக் குறிக்கும் சொல். அதாவது மின்விசையை உண்டாக்கும் பொறியமைவு

generator bus bars : (மின்.) மின்னாக்கி மின்வாய்க் கட்டை: மின்னாக்கியிலிருந்து மின்விசையைக் கொண்டு செல்லும் மின்விசைப் பலகையின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள செப்பு மின்வாய்க் கட்டைகளிலிருந்து பங்கீட்டு மின்சுற்று வழிகளுக்கு மின்விசை செலுத்தப்படுகிறது

geneva motion : (பட்,) ஜெனீவா இயக்கம் : இயக்கப்படும் சக்கரங்