பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
311

களுக்கு உறுதியான, ஆனால் இடையிடையே கொடுக்கிற ஒரு சாதனம். ஆனால் இது, இயக்கி இல்லாமல் இரு திசைகளிலும் சக்கரம் இயங்கு வதைத் தடுக்கிறது. இந்த இயக்கியில் ஒரு பல் அல்லது தேவைக்கேற்ப பல பற்கள் அமைந்திருக்கும். இயக்கப்படும் சக்கரம் முழுமையாகச் சுழன்று விடாமலும் இது தடுக்கிறது

geocentric : (விண்) புவிமையம்: பூமியை மையமாகக் கொண்டதாகக் கருதப்படுபவை

geodetic surveying : புவிப்பரப்பு அளவாய்வு : பூமியின் மேற்பரப்பின் கோளவடிவைக் கவனத்திற் கொண்டு, மிகத் துல்லியமாக அள வாய்வு செய்வதற்கான ஒருமுறை, இந்த முறை புவியமைப்பியல், நீரியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகிறது

geology : புவியமைப்பியல் : நிலவுலக மேல் தோட்டின் ஆடுக்கு வளர்ச்சி மாறுபாடுகள் குறித்துப் பாறைகளைக் கொண்டு ஆராய்ந்தறியும் அறிவியல் துறை

geometrical : வடிவியல் சார்ந்த: வடிவியலுக்கு இணங்கிய உருவுடைய, வடிவியல் விதிகளுக்கு இணங்க அமைந்த, கோணங்கள் போன்ற வடிவியல் கூறுகளை அமைத்தல் அல்லது கொண்டிருத்தல்

geometrical mean : பெருக்க மூலம் : இரு எண்களைப் பெருத்தி அந்தப் பெருக்குத் தொகையின் வர்க்க மூலம் காண்பதால் கிடைக்கும் எண்

geometrical pitch of a propeller: (வானூ.) விமான முன் செலுத்தி வடிவியல் இடைமுகம் : ஒரு விமானத்தின் முன் செலுத்தியானது. அதன் அலகுக் கோணத்திற்குச் சமமான ஒரு கோணத் தைக் கொண்ட ஒரு திருகுசுழல் வட்டத்தின் வழியே நகருமாயின் அந்த முன் செலுத்தியின் ஒரு கூறு ஒரு சுழற்சியில் முன்செல்லும் தூரம்

geomatrical progression : (கணி.) பெருக்க ஏற்றத் தொடர்பு : ஒரே வீதத்தில் ஏறிச்செல்லும் எண் தொடர்பு. இத்தொடர்பின் ஒவ்வொரு எண்ணும் முந்திய எண்ணின் ஒரு காரணியால் பெருக்கப்பட்டுக் கிடைக்கும் தொகையாக இருக்கும். (உதாரணம்:) 2, 4, 8, 16,32 ஆகிய எண்கள் பெருக்க ஏற்றத் தொடர்பில் அமைந்துள்ளன, இதில் பெருக்கக் காரணி 2

geometrical stair : (க.க) வடிவியல் படிக்கட்டு : குறுகிய கிணறுகளில் திருகுமுறுகாக அமைக்கப்படும் படிக்கட்டு. இதனை சுழல் படிக்கட்டு என்றும் அழைப்பர்

geometry: வடிகணிதம்: கோடுகள், மேற்பரப்புகள், திடப்பொருள்கள் ஆகியவற்றின் பண்பியல்புகள் பற்றி ஆராயும் கணித அறிவியல்

georgia pine : (மர) ஜார்ஜியா தேவதாரு: கரணகளைக் கொண்ட கருநிறமரம். இது இறுதி மெருகுப் பொருளாகப் பயன்படும். இந்த மரம் கடினமானது; கனமானது; வலுவானது. ஆனால் ஈரமான இடங்களில் எளிதில் மட்கிவிடக் கூடியது. இது பிசின் தன்மை கொண்டிருப்பதால் இதில் வண்ணங்கள் ஒட்டுவதில்லை

geophysics : (இயற்) புவி இயற்பியல் : பூமியின் இயற்பியல் பண்புகளை ஆராயும் அறிவியல். எடுத்துக் காட்டாக, பூமியின் காந்தத் தன்மை, அதன் மின்கடத்தும் தன்மை, அதன் அடர்த்தி, நில அதிர்ச்சிகள், மாகடல்கள், வாயு