பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
335

heart wood : (மர.) மரவைரம் : ஒரு மரத்தின் மையப்பகுதி. இதனைமென்மரம் சூழ்ந்திருக்கும். இதில் உயிருள்ள உயிரணுக்கள் இரா

heat : (வார்.) வெப்ப நிலை : இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பின் வெப்பச் செறிவினை நீர்மநிலைக்குக் குறைத்தல்

heat-affected zone : (பற்ற.) வெப்பம் பாதிக்கும் பகுதி : உலோகங்களைப் பற்றவைக்கும்போது வெப்பத்தினால் நிலைமாற்றம் பெறுகிற உலோகத்தின் பகுதி

heat conductivity : (பற்.) வெப்பங்கடத்துத் திறன் : ஒரு பெர்ருளின் வழியாக வெப்ப ஆற்றல் பாய்ந்து செல்லும் வேகம் மற்றும் திறம்பாடு

heat distortion point : (குழை .) வெப்பத் திரிபு நிலை : தரமானதொரு பிளாஸ்டிக் பொருளின் ஒரு சலாகையை..0254செமீ அளவு வளைப்பதற்கேற்ற வெப்பநிலை

heat engine : (மின் .) வெப்ப எஞ்சின் : வெப்ப ஆற்றலை நீராவி உள்ளெரிவு போன்ற எந்திர அல்லது இயங்கு ஆற்றலாக மாற்றுகிற எஞ்சின். விசைப்பொறி உருளை எஞ்சின்கள், ராக்கெட் எஞ்சின்கள் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை

heater : (மின்.) சூடேற்றி : ஒரு வெற்றிடக் குழலில் எதிர்முனையைச் சூடேற்றுவதற்குப் பயன்படும் தடையுள்ள சூடேற்றும் கருவி

heater tube: (மின்.) வெப்பூட்டுக் குழாய் : மின் தடைக்கம்பியை அல்லது வேறு பொருள்களைக் கொண்ட ஒரு பெரிய குழாய் வடிவ, கார்பன் இழை விளக்கு அல்லது குழாய்

heating : வெப்ப மூட்டுதல் : உலைக்களத்தின் உலையில் இரும்புத் துண்டினை உரிய வடிவில் வடிப்பதற்கு ஏற்ற வெப்ப நிலைக்குச் சூடாக்குதல்

heat exchange : (குளி. பத.) வெப்பப் பரிமாற்றம் : வெப்பத்தை ஓர் அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்புக்கு மாற்றுகிற ஒரு சாதனம் அல்லது பன்முக அமைப்பு

heating effect of current: (மின்.) மின்னோட்ட வெப்ப விளைவு : மின்னோட்டத்தின் வெப்ப விளைவு. பாயும் மின்னோட்டத்தின் அளவுக்கு நேர் விகிதத்தில் அமைந்திருக்கும்

heating of bearings: தாங்கிகள் சூடாதல்: தவறான உயர்வுகாரணமாக, தாங்கிகளின் வெப்பநிலை உயர்தல். இதனால் இருசும் தாங்கியும் ஒட்டிக்கொள்ளும். அவை விரைவாக இற்று விடவும் காரணமாகும்

heating of dynamos: (மின்.) மின்னாக்கப்பொறி சூடாதல் : மின்னாக்கப் பொறிகள் மூன்று காரணங்களால் சூடாகின்றன: (1) தாங்கிகளில் எந்திர உராய்வு; (2) சுழல் மின்னோட்டங்கள், காந்தத் தயக்கம் காரணமாக உள்ளீட்டு இழப்புகள்; (3) சுருணைகளில் இழப்புகள்

heating surface: சூடாக்கும் பரப்பு: ஒருபுறம் சூடான வாயுக்களையும், மறுபுறம் நீராவி அல்லது நீரையும் கொண்டுள்ள கொதிகலனின் அனைத்துப் பரப்புகளும்

heating unit: (மின்.) சூடாக்கும் அலகு : மின்னியல் முறையில் சூடாக்கும் சாதனத்தில், மின் விசை உண்டாக்கப்படும் பகுதி

heat mark: (குழை.) வெப்பக்குறி : பிளாஸ்டிக் பரப்பில் காணப்படும்