பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
339

எத்திரங்களில் இது பயன்படுத்தப்படுகிறது

herring boning: எதிரெதிர்ச்சாய்வு படிவ அமைப்பு : தச்சுக் குறுக்குக்கை இணைப்புகளில் மீன் வகையின் எலும்புகள் போல எதிரெதிர்ச் சாய்வாக் வரிசைப்பட அமைத்தல்

hertz antenna : (மின்) கம்பியில்லா வானலை வாங்கி : தனது இயக்கத்திற்குத் தரையைச் சார்ந்திராமல் கம்பியில்லாத்தந்தி மின் அலைகளைப் பயன்படுத்தும் வானலை வாங்கி

heterodyne :(வானொலி) ஒலியலைமாற்றி: தந்தியில்லாக் கம்பி வகையில்,கேளா உயர்விசை அலை மற்றோர் அலையில் மோதுவித்து, அதிர்வூட்டிக் கேட்கும் ஒலி அலையாக மாற்றுவதற்குரிய கருவியமைப்பு

hewing : வெட்டி உருவாககுதல் : கோடரி, வாள் போன்ற வெட்டுக் கருவிகளினால் மரத்தை வெட்டி வேண்டிய வடிவத்திற்கு உருவாக்குதல்

hexagon : அறுகோணக் கட்டம் : ஆறுபக்கங்களையும் ஆறு கோணங்களையுமுடைய உருவடிவம். இதில் எல்லாக் கோணங்களும் சமமானவை; கோணங்கள் அனைத்தின் கூட்டுத்தொகை 720°

hexagon nut:ஆறுகோணக்சுரையாணி : ஆறு பக்கங்கள் கொண்ட சுரையாணி

hex head :ஆறுகோணக்கொண்டையானிகள் : அறு கோணக் கொண்டைகளையுடைய திருகாணிகளும் மரையாணிகளும்

hexode (மின்.) ஆறுமுனையம்: ஆறு மின்முனைகளைக் கொண்ட ஒர் எலெக்ட்ரான் குழல். இது பொதுவாக ஒர் எதிர்முனை தகடு நான்கு வரைச்சட்டங்களைக் கொண்டிருக்கும்

hickey (மின்.) குழாய் வளைப்பான் : (1) ஒரிடத்தில் பொருத்தபட்டுள்ள பொருளின் இணைப்பில் நடுத்தண்டிற்கும் ஆதாரத்திற்குமிடையில் பொருத்தப்பட்டுள்ள திருகிழையுடைய, சிறிய பித்தளை அல்லது இரும்புச் சாதனம். இது அந்தப் பொருளின் நடுத்தண்டிலிருந்து வெளிவரும் கம்பிகளுக்குப் புற வழியை உண்டாக்குகின்றன (2) மி ன் கம்பிக் காப்புக் குழாயை அல்லது வேறு குழாயினை தேவையான வடிவத்தில் வளைப்பதற்குப் பயன்படும் குழாய் வளைப்புச் சாதனம்

hichory : வாதுமை மரம் : திண்னிய பளுவான வெட்டுமரம். வாதுமை போன்ற கொட்டையும் தரும் மரவகை. இதன் வெட்டு மரம் கடினமானது; திண்மை வாய்ந்தது; இதில் வேலைப்பாடு செய்வது கடினம். வளைப்பு வேலைப்பாடு செய்வது கடினம். வளைப்பு வேலைகளில் மிகுதியும் பயன்படுகிறது

'hidden surface line: மறைபரப்புக்கோடு : எந்திர வரை படத்தில் மறைந்திருக்கும் உறுப்பின் பரப்பினைக் குறிக்கும் குறுகிய இடைக்கோடுகளான கோடு

highboy :உயர்பேழை : கால்கள் மீது நிற்கும், இழுவைப் பெட்டிகள் உடைய உயரமான பேழை

high brass : (உலோ) உயர்தரப் பித்தளை: வாணிக முறையில் தகடுகளாகவும் துண்டுகளாகவும் கிடைக்கும் பித்தளை. இதில் 65% பித்தளையும் 35% துத்தநாகமும் கலந்திருக்கும். நெசவுக்காகவும், கரைதலுக்காகவும், வடிவமைப்புக்காகவும் பயன்படுத்தப்படுகிறது