பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

அனைத்து உறுப்புகளும் சுருங்குகின்றன

hydrophone : (மின்.) நீரியல் ஒலியலைக் கருவி: நீரினுள் ஒலியலைகளைக் கண்டுபிடிக்கும் ஒரு வகைக் கருவி. இது நீரில் உண்டாகும் ஒலியை மின்னியல் சைகைகளாக மாற்றுகிறது

hydro static brakes: (தானி.) நிலை நீர்மத் தடைகள் : காற்றிடை புகாமல் மூடப்பட்டுள்ள, நீர்மங் கொண்ட ஒருவகைத் தடை அமைப்பு. கால்மிதியை அழுத்தும் போது நீர்மதேக்கம் திரிபடைந்து, அழுத்தம் நான்கு சக்கரங்களுக்குச் சரிசமமாகப் பகிர்மானம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு சக்கரத்திலுமுள்ள தடைதிரவக் கலம் வெளிப்புறமாக விரிவடைந்து தடை வட்டுருளையில் ஆறு தடைக்கால் மிதிகள் உரசும்படி செய்கிறது

hydro static joint: (கம்.) நிலை நீரியல் இணைப்பு : இது பெரிய நீரிணைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில், ஒரு திரவத்தின் நிலைநீரியல் அழுத்தத்தின் மூலம் ஒரு குழாயின் மூட்டு வாயினுள் ஈயத்தகடு இறுக்கமாக நுழைக்கப்படுகிறது

hydro statics: நிலை நீரியல் : (1) அமைதி நிலையிலுள்ள நீர்மத்தின் அழுத்த மற்றும் சமநிலை ஆற்றல்களைக் கையாள்தல்

(2) நீர்மங்களின் அழுத்த நிலை சமநிலை பற்றி ஆராயும் அறிவியல்

hydro static pressure: (குளி. பத.) நிலைநீர்ம அழுத்தம்: ஒரு திரவத்தில் மூழ்கச் செய்து, அந்தத் திரவத்தின் பாய்ச்சலோடு நுகர்கின்ற ஒரு சிறிய பொருளின் மீது ஓர் அலகு பரப்பளவில் உண்டாகும் அழுத்த விசை

hydrous; (வேதி.) நீரகப் பொருள்: வேதியியலில் நீரடங்கிய களிப் பொருட்கள். இவை ஹைட்ரஜன் அணு ஒன்றையும், ஆக்சிஜன் அணு ஒன்றையும் கொண்டிருக்கும்

hygrometer : ஈரமானி : வாயு மண்டலத்தில் ஈரநிலை அளவினைக் கணித்துக் காட்டும் கருவி

hygroscopic : (குழை.) ஈரம் உறிஞ்சுந் தன்மை : ஈரம் உறிஞ்சும் தன்மையுடைய பொருள்

hyperbola : நிமிர்மாலை வட்டம் : குவிகையுருவில் அடித்தளத்தின் மீது சாய் பக்கங்களுக்குள்ள கோணத்திலும் பெருங்கோணம் படும்படி வெட்டிய குறுக்கு வெட்டுவாயின் வடிவம்

நிமிர்மாலை வட்டம் (படம்)

hyperbolic : (கணி.) குவிபிறை சார்ந்த : நிமிர்மாலை வட்டவடிவம் உடைய

hyper eutectoid : (உலோ.) உயர் நிலையமைதிப் பொருள் : நிலையமைதிப் பொருளை கார்பனிலுள்ள பொருளின் வீதத்தைவிடக் குறைந்த அளவில் கொண்ட எஃகு

hyper acoustic zone : (விண்.) ஒலிச்செறிவுக் குறைவு மண்டலம் : உயர் வாயுமண்டலத்தில் 96 முதல் 160கி.மீ. வரையுள்ள மண்டலம். இங்கு, அடர்த்தி குறைந்த காற்று மூலக்கூறுகளுக்கிடையிலான தூரம். ஒலியின் அலைநீளத்திற்குச் சமமாக இருக்கும். இதனால். ஒலியானது, கீழ்மட்டங்களிலுள்ளதை விடக் குறைந்த ஒலி அளவுடன் அனுப்பப்படுகிறது

hypocycloid : உள் உருள்வரை : வட்டத்தின் சுற்றுவரையிலுள்ள புள்ளி மற்றொரு வட்டச் சுற்று