பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
353

வரையினுள்ளாக வட்டம் உருளும் போது இயக்கும் வளை வரை வடிவம்

hypoid : (எந்.) குவிபிறை வடிவம்: நிமிர் மாலை வட்டவடிவைக் குறிக்கும் சுருக்கச்சொல். இது சுழல் சாய்தளப் பல்லிணை பல் உடைய தனிவகைப் பல்லிணையைக் குறிக்கும்

hypoid gears : (தானி.எந்.) (குவி பிறைப் பல்லிணைகள் : சுழல் சாய்தளப் பல்லிணை களின் ஒருவகை. இது பல்லிணையின் மையத்திற்கு மேலே அல்லது கீழே இறக்கைப் பகுதியை அமைப்பதற்கு அனுமதிக்கிறது

hypotenuse : நெடுங்கை வரை : ஒரு செங்கோணத்தின் முக்கோணத்தின் பக்கங்களை இணைக்கும், செங்கோணத்திற்கு எதிர்முகமான உறுநீள் கோடு

hypotenuse oblong : (தச்சு) நீள்நெடுங் கைவரை : காகிதத்தில் கனத்திற்கும் அகலத்திற்குமிடையிலான விகிதம். ஏறத்தாழ, 11/2:1

hypothermia : (நோயி) ஆழ் உறைநிலைச் சிகிச்சை முறை : ஒரு நோயாளியை இயல்பான உடல் வெப்பநிலையிலிருந்து பல பாகை கள் குறைந்த குளிர்ந்த வெப்ப நிலையில் வைத்திருந்து நோயைக் குணமாக்க ஆழ்ந்த உறைநிலை மருத்துவச் சிகிச்சைமுறை

hypothesis: புனைவுகோள்: வாத ஆதாரமாகத் தற்காலிகமாகக் கொள்ளப்படும் ஓர் அனுமானக் கருத்து

hysteresis : (மின்.) காந்தத் தயக்கம் : காந்த ஆற்றலுக்குக் காந்தத்தின் தூண்டுதல் இயக்கம் பிற்படும் நிலை, இந்த நிலையினால் வெப்பம் உண்டாகும்