பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

மின்னோட்டம் குறைவாக உண்டாகும்படி செய்கிற ஒரு மாறு மின்னோட்டத்துடன் இணைக்கப் பட்டுள்ள ஒரு மின்சுமை

inductive reactance : (மின்) தூண்டு எதிர் வினைப்பு : திருகு வளைவுடைய கம்பியைக் கொண்ட ஒரு மின்சுற்றுவழியில் மின்னோட்டம் பாய்வதற்கு எதிரீடு. இந்தத் திருகுவளைவுகள் ஓர் இரும்பு உட்புரியில் சுற்றப்பட்டிருந்தால் எதிரீடு அதிகமாக இருக்கும். ஒரு மின் சுருள்வழியாக மாற்று மின்னோட்டம் பாய்வதற்கு ஏற்படும் மின் தடையின் அளவு

inductivity : (மின்) தூண்டு திறன் : மின் தூண்டலுக்கான திறன் அல்லது ஆற்றல்

inductor : (மின்) மின் தூண்டு கருவி : தூண்டு மின் இயக்க விசையை (இ.மி.வி.) உண்டாக்கப்படும் ஒரு மின் கடத்தி

inductor type magneto: (தானி.எந்.) மின்தூண்டு வகைத் தனிக் காந்த மின்னாக்கி : இது ஒரு நிலைக்காந்தம். மின்சுருள்கள் நிலையாக இருக்க, ஒரு மின்னகத்துடன் சுழல்கிறது

industrial automation: (தானி ) தொழில்முறை தானியக்கம் : சரக்குகளையும், உற்பத்திப் பொருள்களையும் தானியக்க முறையில் உற்பத்தி செய்தல்

industrial life : தொழில் வாழ்க்கை : தொழில்துறை தொடர்பான மனித நடவடிக்கை நடைபெறும் துறை

industrial system : தொழிலியல் அமைப்புமுறை: தொழிற்சாலையை நிறுவி மேலாண்மை செய்யும் அமைப்பு முறை. தொழிற்சாலையில் உற்பத்தி, தொழிலாளரை வேலைக்கமர்த்துதல் முதலியவற்றை சீரமைத்தல்

industrial waste : (கம்) தொழிலியல் கழிவு : தொழில் நிறுவனங்களில் கையாளப்படும் செய்முறைகளிலிருந்து வெளிப்படும் திரவக் கழிவுப் பொருட்கள்

inert செயலறு : எந்தப் பொருளுடனும் எளிதில் ஒருங்கிணைந்து இயங்கும் ஆற்றலற்ற

inertia : (இயற்.) சடத்துவம் : நிலையாக இருக்கும் ஒரு பொருள். அதே நிலையில் நிலைத்திருப்பதற்கு அந்தப் பொருளுக்குள்ள நாட்டம் அல்லது இயங்கும் ஒரு பொருள் அதே இயக்க நிலையிலேயே நிலைத்திருப்பதற்கு அந்தப் பொருளுக்குள்ள நாட்டம்

inertial force : (விண்) செயலறு விசை : முடுக்கு விசைக்குச் சமமான அளவில் அமைந்து எதிர்த்திசை இயங்குகிற, ஒரு முடுக்கு விசைக்கு எதிர்வினையாக உண்டாகிற விசை. இந்த விசையானது. முடுக்கு விசை நீடித்திருக்கும் வரையில் மட்டுமே நீடித்திருக்கும்

interior figures and letters : (அச்சு.) அடிநிலை எண்கள், எழுத்துகள் : அச்சிட்ட வரியில் காலடியில் அமைக்கப்படும். எடுத்துக்காட்டு: C6H5OH

infiltration : (குளி.பத) ஊடு பரவல் : துளையுடைய சுவர். வெடிப்பு, கசிவு வழியாக காற்று உள்நோக்கி ஊடுபரவுதல்

infinite impedance : (மின்) வரையிலா மறிப்பு : மின்னியலில் பல கோடி மெகோ எச்.எம்.எஸ். அளவுள்ள மிக அதிக மறிப்பு

inflation : உப்பச் செய்தல் : (1) காற்று அல்லது வாயு நிரப்பி உப்பச் செய்தல்

(2) தகுதித் தரங்கள் குறித்துப்