பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
363

போலியான நியதிகளை ஏற்படுத்துதல்

inflow : (வானூ.) உட்பாய்வு : விமானத்தின் ஒரு முற்செலுத்தியினுள் காற்று உட்பாய்தல்

information : (மின்) நுட்பச் செய்தி : வானொலி அல்லது தொலைக்காட்சிச் சைகைகளில், படத்தகவல் போன்ற நுட்பச் செய்திகள்

infrared : (குழை.) அகச்சிவப்பு : கட்புலனாகும் கதிர்வீச்சுடைய நிறமாலையின் சிவப்பு முனையின் கீழேயுள்ள கட்புலனாகாத கதிர் வீச்சு மண்டலம். இந்த கதிர்வீச்சு அலைகள் ஒளியைவிட ஊடுருவக் கூடியது. இந்த மண்டலத்தை வெப்பம் சூழ்ந்திருக்கும்

'infrasonic : (மின்.) மிகையொலி அலைவெண் : காதால் கேட்கக் கூடிய அலைவெண் வீச்சுக்கு அப்பாற்பட்ட ஒலி அலைவெண்கள்

infrared guidance : (விண்) அகச்சிவப்பு வழிகாட்டி : அகச்சிவப்பு வெப்ப ஆதாரங் களைப் பயன்படுத்தி இலக்குகளை உளவு பார்க்கவும், திசைகாட்டவும் பயன்படுத்தப்படும் ஓர் அமைவு

infusorial earth : (மண்) மட்கிய மண் : நுண்ணிய உயிரிகளின் எச்சங்களில் படிந்துள்ள மண் படிவம்

ingle nook: (க.க) புகை போக்கி மூலை : ஒரு கணப்படுப்பின் மூலைப்பகுதி

ingot : வார்ப்புக்கட்டி : தங்கம், வெள்ளி, எஃகு போன்ற உலோக வார்ப்புக்கட்டி. உலோகம் தூய் மையாக்கப்பட்டதும் இத்தகைய வார்ப்புப் பாளங்களாகத் தயாரிக்கப்படுகின்றன. இவை பொதுவாகச் செவ்வக வடிவில் இருக்கும். இக்கட்டிகளில் தயாரிப்பாளர்களின் அடையாளக் குறி முத்திரையிடப்பட்டிருக்கும்

ingot iron : இரும்புக்கட்டி : மென் மையான எஃகு, இதில் கார்பன் குறைவாக இருக்கும். இது திறந்த உலை முறை அல்லது பெசமர் முறை மூலம் தயாரிக்கப்படுகிறது

ingredient : அமைப்பான் : ஒரு கலவையின் கூறுகளில் ஒன்று

inherent stability : (வானூ) உள்ளார்ந்த உறுதிப்பாடு : ஒரு விமானத்தின் உறுப்புகளை முறைபட அமைத்துப் பொருத்துவதால் ஏற்படும் உள்ளார்ந்த உறுதிப்பாடு

inhibitor: (வேதி) தடையுறுத்து பொருள் : வேதியியல் வினைப்பாட்டினை நிறுத்துகிற அல்லது மந்தமாக்குகிற ஒரு வேதியியல் கார்கி. துருப்பிடிப்பதைத் தடுக்கும் அல்லது வேகங் குறைக்கும் ஒரு பொருள்

inhibitors : (தானி) தடைகட்டுப் பொருள் : சீர் குலைவைத் தடுப்பதற்காக எண்ணெயுடன் சேர்க்கப்படும் சேர்மானப் பொருள்

initial : (அச்சு) தலைப்பு எழுத்துக்கள் : அத்தியாய்ங்களின் அல்லது முக்கிய பிரிவுகளின் தொடக்கத்தில் பயன்படுத்தப்படும் பெரிய எழுத்துக்கள்

initial velocity : (இயற்.) தொடக்க வேகவீதம் : ஒரு பொருளின் இயக்க வேகவீதம் எந்த நிலையிலிருந்து கணக்கிடப்படுகிறதோ அந்த நிலையில் அதன இயக்க வேகவீதம்

injection moulding: உட்செலுத்து வார்ப்பு: சூட்டால் நிலையாக இறுகிவிடுந்தன்மையுடைய வெப்பத்தினால் மென்மையாக்கபபட்ட வார்ப்படப் பொருளை நன்கு