பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364

சூடாக்கிய ஆலோக வார்ப்படத்தினுள் ஒரு திமிசு மூலம் செலுத்தி உருவாககும வார்ப்படம். திமிசை வெளியில் எடுத்ததும், வார்ப்படம் திறந்து கொண்டு, உருவாக்கிய பொருளை வெளித் தள்ளிவிட்டு, அடுத்த சுழற்சிக்காக மூடிக்கொள்கிறது

injector: (பொறி.) உட்செலுத்தி: ஒரு நீராவிக் கொதிகலனுக்குள் தொடர்ந்து நீரினைச் செலுத்துவதற்குப் பயன்படுததப்படும் ஒரு சாதனம்

ink : (அச்சு.) மை அட்டை :அச்சுருக்கள் மீது மை பூசுவதற்காகப் பயன்படுத்தப்படும், பஞ்சு திணித்த தோல் அட்டை. உருளை அச்சு எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு இவை பயன்படுத்தப்படுவதில்லை

ink ball : (அச்சு.) மைக்கோளம் : அச்சுருக்கள் மீது மை பூசுவதற்காகப் பயன்படுத்தப்படும், பஞ்சு திணித்த தோல் பந்து. உருளை அச்சு எந்திரங்கள் பயனுக்கு வந்ததும் இது பயனற்றுப் போயிற்று

ink disk: (அச்சு.) மைத் தட்டம் : வட்டவடிவமான தட்டு அல்லது தட்டம். இதில் மை தடவப்பட்டு, அச்சுத்தாள் அழுத்தும் தகட்டுப் பாளத்தில் பரப்பப்படுகிறது

ink fountain: (அச்சு) மை ஊற்று: ஓர் அச்சு எந்திரம் இயங்கும் போது அதன் தட்டத்திலும் உருளைகளிலும் தானாகவே மையை ஊட்டும் ஒரு சாதனம்

inking in : மைப்பூச்சு : ஒரு வரை படத்திற்கு மையூச்சுக் கொடுக்கும் முறை

ink knife : (அச்சு.) மைக் கத்தி : மைகளைக் கலப்பதற்காகப் பயன்படும் வண்ணத் தட்டுக்கத்தி

inlaid work : உட்பதிவு ஒப்பனை: கல் முதலியனவற்றை உள் அழுந்தலாகப் பதித்துச் செய்யப்படும் அலங்கார வேலைப்பாடு

inlay ; உட்பதிவு : (1) தந்தம், மரம் உலோகம் ஆகியவற்றின் துண்டுகளை இன்னொரு பொருளில் உட்பதித்துச் செய்யப்படும் அலங்கார வடிவமைப்பு

(2) இத்தகைய ஒப்பனை வடிவமைப்பு

inlet port: (தானி) நுழைவாயில்: நீள் உருளைக்கு எரிபொருளைச் செலுத்துவதற்கான நுழைவாடம்

in-line engine : (தானி) உள்வரி எஞ்சின்: நீள் உருளைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் அடுக்கப்பட்டுள்ள எஞ்சின்

inorganic : (வேதி) கரியமற்ற : கரியம் (கார்பன்) உள்ளடங்கிராத வேதியியற் பொருட்கள்

input (இயற்.) உட்பாடு : ஒரு வேலையைச் செய்வதற்குச் செலவாகும் ஆற்றலின் மொத்த அளவு

inscribe : (1) எழுத்துப் பொறிப்பு : நீண்ட நாள் இருக்கும் வகையில் எழுத்துப் பொறிப்பு எழுதிப் பதிவு செய்தல் அல்லது பொறித்து வைத்தல்

(2) உள்வரை : ஓவியத்தில் ஓர் உருவத்திற்குள் இன்னொரு உருவத்தை வரைதல்

insert,(same as inset),(அச்சு) இடைச்செருகுப் பக்கம்: ஒரு புத்தகத்தைக் கட்டுமானம் செய்வதற்கு முன்பு, அதிகப்படியான பக்கங்களைத் தனியாக அச்சடித்து உரிய இடங்களில் இடைச்செருகி வைத்தல்