பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
365

inserted blade cutters : (எந்) செருகு வெட்டுக்கத்திகள்: உலோகத் தகட்டில் வடிவரிசைத் துளைகள் இடுவதற்கான பெரிய அள வெட்டுக்கத்திகள். இதில் அதிவேக எஃகுக்கத்திகள் உரிய நிலைகளில் செருகப்பட்டு வெட்டும் வேலை செய்யப்படுகிறது

inserted tooth cutter : (எந்) செருகு பல்வெட்டி : செருகப்பட்ட பற்களைக்கொண்ட ஒரு வெட்டுச் கருவி.இதில்,பல்வேறு முறைகளில் பற்கள் பொருத்தப்படுகின்றன.வெட்டுக்கருவி ஆறு அங்குலம் அல்லது அதற்கு அதிகமான விட்டமுடையதாக இருக்கும் போது இந்தச் செருகு பற்கள் பயன்படுத்தப்படுகின்றன

insertion loss : (மின்) செருகல் இழப்பீடு : ஒருசில சாதனங்களை அல்லது கருவிகளைச் செருகுவதன் காரணமாக மின் அனுப்பீட்டு முறையில் ஏற்படும் இழப்பீடு

inside calipers (பட்) உள்முக விட்டமானி : இதில் கால்களின் நுனியிலுள்ள புள்ளிகள், உள்முகமாக, வளைந்திருப்பதற்குப் பதிலாக வெளிப்புறமாக வளைந்திருக்கும் இதனால், உள்முக விட்டங்களை அளவிடுவதற்கு இது பயன்படுகிறது

inside thread : (எந்) உள்முகத் திருகிழை : ஒரு மரையாணியைப் பொருத்துவதற்கேற்ப உள்முக விட்டத்தில் வெட்டப்பட்ட திரு கிழை

inspection : (எந்) ஆய்வு செய்தல் : உற்பத்தி செய்த பொருட்களின் உறுப்புகளும் மூலப்பொருட்களும் குறித்துரைக்கப்பட்ட தர அளவுகளில் அமைந்திருக்கின்றனவா என்பதை அறிந்துகொள்வதற்காக ஆய்வுசெய்திடும் முறை

inspection bench: (பட்) ஆய்வு மேசை: மேல்மட்டம் வழுவழுப்பாக அமைந்த ஒரு மேசை, இது பெரும்பாலும் உலோகத்தில் செய்யப் பட்டிருக்கும். இதன்மேல் ஆளவு கருவிகள் வைத்துப் பொருட்கள் ஆய்வு செய்யப்படும்

inspection gauges (எந்) ஆய்வு அளவிகள்: கொள்வினை செய்யப்படும் பொருளின் துல்லியத்தைச் சோதனை செய்வதற்குக் கொள் வினை செய்வதற்குப் பயன்படும் அளவு கருவிகள்

inspector: ஆய்வாளர் : ஒரு பொருளின் தரமும் அளவும் வேண்டுறுத்தங்களுக்கேற்ப இருக் கின்றனவா என்பதைக் கண்டறியும் கடமை கொண்டுள்ள அதிகாரி

instellation : நிறுவுதல் : எந்திர சாதனங்கள், மின்னாக்கக் கருவிகள் முதலியவற்றை அதனதன் நிலையில் பொருத்தி வைத்தல்

instalment : தவணை : (1) தவணையில் வழங்குதல்

(2) தவணை முறையில் பணம் வழங்குதல்

instrument flying : (வானூ) கருவியால் பறத்தல் : கருவிகளைப் பயன்படுத்தி மட்டுகே விமானத்தைக் கட்டுப்படுத்தும் கலை. இதனை 'நிலங்காணாது பறத்தல்' என்றும் கூறுவர்

instrument panel : (தானி.எந்) கருவிச் சேணம் : விமானம் ஓட்டியின் கண்ணுக்கு எளிதில் தெரியும் படி பல்வேறு கருவிகளும், சுட்டு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ள மென்பலகை

instrument transformer: (மின்.) அளவி மின் மாற்றி: உயர்ந்த அளவு மின்னழுத்தங்களை அதிகப் பதிவுத் திறன் கொண்ட மானியாலும் அறிந்து கொள்வதற்கு உதவும் சாதனம்