பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

றுக்கு மெருகூட்டுவதற்கும் பயன்படுகிறது

aluminium: (கனி.) அலுமினியம்: மிக இலேசான, வெண்மையான உலோகம். இது தனியாகவும், செம்புடன் கலந்த உலோகக் கலவையாகவும் பயன்படுத்தப்படுகிறது

aluminium alloys : அலுமினியம் உலோகக் கலவைகள் : அலுமினியமும், செம்பு, நிக்கல், டங்ஸ்டன் முதலிய உலோகங்களும் இணைந்த கலவைகள். வலிமையுடன் கனமின்மையும் தேவைப்படும் வார்ப்புருவங்களையும், தகடுகளையும் தயாரிக்கப் பயன்படுபவை. இந்த உலோகக் கலவைகள். தூய அலுமினியத்தை விட மதிப்புடையவை

aluminium bronze : அலுமினிய வெண்கலம் : செம்பை அலுமினியத்துடன் பல்வேறு வீத அளவுகளில் கலந்து தயாரிக்கப்படும் ஒர் உலோகக் கலவை

aluminium bronze powder: (வண்.) அலுமினிய வெண்கலத்தூள் : கனிம உலோகங்களை நொறுக்கித் தூளாக்கும் ஆலையில் தயாரிக்கப்படும் நுண்ணிய அலுமினியத் தூள். வண்ண மெருகெண்ணெய் அல்லது நேந்திர எண்ணெயுடன் கலந்து, உலோகச் சாயமாகப் பயன்படுத்தப்படுகிறது

aluminium hydroxide : (வேதி.) அலுமினியம் ஹைட்ராக்சைடு AI(OH)2, ஊன் பசை போன்ற வெண்மையான திடப்பொருள் நீரைப் பயன்படுத்துவதற்கும், சாயந்தோய்ப்பதில் சாயத்தைக் கெட்டிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

aluminium stearate : (வண்; அரக்கு. வண்) அலுமினியம் ஸ்டியரேட் : வழவழப்பான சமதளத்தை உண்டாக்குவதற்காக அரக்குச் சாயங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது

alum leather : படிக்கத் தோல் : படிகாரத்தைப் பயன்படுத்திப் பதனிடப்பட்ட தோல்

amalgam: (கணி.) இரசக் கலவை: பாதரசமும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை

amalgamation : (மின்.) கூட்டுக் கலவை : வேதி மின்கலத்திலுள்ள துத்தநாகத் தகட்டுக்குப் பாதரசம் முலாம் பூசி, துத்தநாகத்திலுள்ள அசுத்தங்களிலிருந்து உண்டாகும் வினைகளைத் தடுக்கக்கூடிய ஒர் உலோகக் கலவையை உருவாக்குதல்

amber : (மின்.) அம்பர் : மஞ்சள் நிறமான அல்லது செம்பழுப்பு நிறமான, ஒளி ஊடுருவக்கூடிய ஒரு பிசின். இது மற்றொரு பொருளுடன் உராயும்போது உராய்வினால் மின்னேற்றம் பெறுகிறது

ambo : (க.க.) சொற்பொழிவு மேடை : தொடக்கக் காலக் கிறித்தவக் கோயில்களில் காணப்படும் சொற்பொழிவு மேடை.இதிலிருந்து வழிபாடுகளும், வழிப்பாட்டுப் பாடல்கள் பாடுவதும் நடைபெறும்

amboine: அம்போய்னா: கிழக்கு இந்தியாவில் காணப்படும் ஒரு மரம். இதிலிருந்து அழகிய வண்ண மரக்கட்டைகளும், பலகைகளும் தயாரிக்கப்படுகின்றன

ambroin : அம்பிராய்ன்: ஒருவகை மின் கடத்தாப் பொருள், குங்கிலியத்திலிருந்தும், சிலிக்கேட்டுகளிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. இது வலிமையானது; வெப்பத்தைக் கடத்தாதது; ஈரத்தை உறிஞ்சாதது; இது வார்ப்பு மின்காப்புகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது