பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368

கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திலுள்ள இலக்குகளைத் தாக்குவதற்குச் செலுத்தப்படும் ஏவுகணை

inter electrode capacitance: (மின்.) மின் முனையிடைக் கொண்மம்: ஓர் எலக்ட்ரான் குழலில் உள்ள உலோக உறுப்புகளிடையிலான கொண்மம்

interference : (வானூ) இடையீடு : (1) இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பொருள் ஒன்றன் மீது ஒன்று ஏற்படுத்தும் வளியியக்கத் தாக்குறவு

(2) வானொலியில் பெறப்படும் சைகைகளில் மாற்றத்தை அல்லது ஏற்றத்தாழ்வை உண்டாக்கும் மின்னியல் அல்லது காந்த உலைவு

(3) தொலைக்காட்சியில் ஒலியையும் ஒளியையும் குலைக்கும் போலியான மின்னியல் சைகைகள்

interferometer: (உலோ) ஒலியலை அளவுமானி: இடையீட்டுத் தடுப்பு மூலம் ஒலியலைகளின் நீளத்தை அளக்கும் கருவி

intergalactic space : (விண்) வான்கங்கை இடைவெளி : வான் கங்கைகளுக்கு இடையேயுள்ள இடைவெளி தூரம்

interior finish: (க.க) உட்புறச் செப்பம்: (1) ஒரு கட்டிடத்தின் உட்புறத்தில் செய்யப்படும் இறுதிச் செப்பத்தின் விளைவு

(2) கட்டிடத்தின் உட்புற அலங்காரங்களை இறுதியாகச் செப்பமிடுவதற்குப் பயன்படும் ஒரு பொருள்

interlacing: இடையீட்டு இணைப்பு: தொலைக்காட்சியில் தொலைவுக்கனுப்பும்படி நிழல் ஒளிக்கூறுகளைத் தனித்தனியாகப் பிரித்தெடுக்கும் முறை. இதில் ஒற்றப்படை எண்ணிக்கை வரிகள் தனிப்புலமாக அனுப்பப்படுகின்றன. இரட்டைப் படை எண்ணிக்கை வரிகள் பின்னர் மேலடுக்கில் நிரப்பப்பட்டு முழுப்படமாக உருவாக்கப்படுகிறது

interlock: (மின்.) இடைப்பூட்டு: உயர் மின்னழுத்தங்களையுடைய பெட்டிகளின் கதவுகளிலுள்ள ஒரு காப்புவிசை. கதவைத் திறந்ததும் உயர் மின்னழுத்தச் சுற்றுவழிகள் செயலற்றுவிடும்

interlocking (எந்) இடைப்பூட்டு செய்தல்: கண்ணறுத்துப் பொருத்துவதன் மூலம் ஒன்றாக இணைத்தல்

intermediate frequency: இடையீட்டு அலைவெண்: வானொலியில், மீமிகை ஒலியலை மாற்றி ஒலிவாங்கியில் கலப்பியினால் அல் லது முதலாவது பிரிப்பானால் பெறப்படும் சிறந்த அலைவெண்

intermediate gear: (பட்) இடையீட்டுப் பல்லிணை: திசை மாற்றாமலேயே ஒரு சக்கரத்திலிருந்து மற்றொன்றிற்கு விசையைச் செலுத்துவதற்காக அவற்றுக்கிடையே பொருத் தப்படும் மூன்றாவது பற்சக்கரம்

intermittent gear: (பட் ) இடைவிட்ட பல்லிணை: பற்கள் தொடர்ச்சியாக இல்லாத ஒரு பல்லிணை. ஆனால் இதில் இடையிடையே சமதளப்பரப்புகள் இருக்கும். இந்தச் சமதளப் பரப்புகளில் இயங்கும் சக்கரம்படும் போது நிலையாக இருக்கும்

intermodulation : (மின்) இடை அலைமாற்றம் : சிக்கலான ஒரு மின்னலையை மற்றொரு மின்னலையாக மாற்றுதல். இது அலைவெண் களின் கூட்டுத்தொகையாகவும், வேறுபாடாகவும் குறிக்கப்படும்

internal circuit: (மின்) உள் மின்சுற்றுவழி : புறமுனைகளுக்