பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
369

கிடையே சேர்க்கப்பட்ட ஒரு மின்னியல் சுற்று வழியின் பகுதி. உள் மின்சுற்று வழியில் ஏற்படும் தடையினால் மின் இழப்பு ஏற்படுவதுடன், மின்கலத்தின் அல்லது மின்னாக்கியின் உற்பத்தித் திறனளவையும் குறைக்கிறது

internal combustion engine: (எந்.) உள்ளெரி எஞ்சின்: ஓர் அடைபட்ட அறைக்குள் அல்லது நீள் உருளைக்குள் உள்ள எரி பொருள் எரிவதால் விரிவாக்க விசை ஏற்படுவதன் மூலம் இயக்க விசை உண்டாகும் எஞ்சின்

internal forces : (இயற்) அக விசைகள்: ஒரு பொருளின் மூலக்கூறுகள் இயங்குவதால் அந்தப் பொருளின் உள்ளே உண்டாகும் விசைகள்

internal gear: அகப்பல்லிணை: ஒரு வளையத்தின் உட்புறப் பரிதியில் அமைக்கப் பட்டுள்ள பற்களில் பொருந்தி பற்சக்கரங்கள் சுழலும் போது, அந்த்ப் பல்லிணை 'அகப் பல்லிணை' எனப்படும்

internal gear drive; (தானி) அகப்பல்லிணை இயக்கம்: வேக விகிதத்தை அதிகரிப்பதற்காக, அல்லது குறைப்பதற்காக, ஓர் அகப்ப்ல்லிணை, ஒரு சுழல் நுனியுடன் கொளுவி இணைத்து இயங்கும் இயக்கம். பின்புற அச்சு இயக்கம் இதற்கு எடுத்துக்காட்டு

internal grinder : (எந்) அக உராய்வு எந்திரம் : நீள் உருளைகளைத் துல்லியமாக வடிவமைப்பதற்கும் மற்ற உட்புற நுட்பு வேலைப் பாடுகளுக்கும் பயன்படக் கூடிய ஒரு உராய்வு எந்திரம்

internal resistance (மின்) அகத்தடை : மின்னழுத்தத்தின் அல்லது மின்னியக்க விசையின் ஆதாரத்திலுள்ள உள்தடை, மின் கலத்தில் அல்லது மின்னாக்கியில் இந்த அகத்தடை உள்ளது

internal thread: (எந்) அகத் திருகிழை : ஒரு பொருளின் உட்புறம் வெட்டப்ப்ட்டுள்ள திருகிழை. ஒரு மரையாணியில் இவ்விதம் திரு கிழை வெட்டப்பட்டிருப்பதைக் காணலாம்

interplanetary space : (விண்) கோள்களிடைவெளி : சூரிய மண்டலத்தின் வரம்புகளுக்கு அப்பால், கோள்களுக்கிடைப்பட்ட தாகவுள்ள இடைவெளி

interteller flight: (விண்) விண் மீன்களிடைப் பயணம் : கதிரவன் அண்டத்திற்கு அப்பாற்பட்டு, விண் மீன்களுக்கிடையே பறந்து பயணஞ்செய்தல்

interpolation : (கணி) இடை மதிப்பீடு : கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு வரிசைகளில் இடையிலுள்ள ஓர் உருவின் மதிப்புகளை கணக்கிடுதல்

Inter-pole : (மின்) இடைமுனை : பிரதான களப் புலங்களிடையே வைக்கப்பட்டு மின்னகத்தின் மூலம் தொடர்பு வரிசைகளில் மின்னியல்முறையில் இணைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய புலமுனை

interrupted arch : இடையறு கவான் : வில்வளைவுடைய முகப்பு. இதன் மையப் பகுதி துண்டுபட்டிருக்கும்

interrupter : (மின்) இடையறுப்பான் : ஒரு மின்சுற்றுவழியில், மிக அடுத்தடுத்த இடைவெளிகளில் மின் இணைப்பைத் துண்டிக்கவும், இணைக்கவும் செய்யக்கூடிய ஒரு சாதனம்

inter-sect: குறுக்குவெட்டு: குறுக்காகச் செல்; ஊடறுத்தல்; குறுக இட்டுப் பிரித்தல்

inter-section : (வடி.கணி) குறுக்கு வெட்டுப் புள்ளி: கன்னிதத்தில் ஒன்றையொன்று