பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

370

குறுக்கு வெட்டும் பொருள்கள் குறுக்கிட்டுச் சந்திக்கும் புள்ளி

interstice : சிறு இடைவெளி: சிறு வெடிப்பு அல்லது ஒடுங்கிய பிளவு

inter-type : (அச்சு.) வரிவாரி அச்சுக்கோப்பான் : அச்செழுத்துக்களை வரிவரியாக வார்த்து உருவாக்கும் அச்சுக்கோப்பு எந்திரம்.இது வரி உருக்கச்சுப்பொறி போன்றது

interval (பட்.) இடைவெளி: ஒரே மாதிரியான எந்திரச் செயற்பாடுகளிடையே கால இடைவெளி

intestine : (உட) குடல் : உணவுக் குழாயின் கீழ்ப்பகுதி இது பெருங்குடல், சிறு குடல் என இரு பகுதிகளைக் கொண்டது

intrados or soffit : உட்புற வளைவு : ஒரு வளை முகட்டின் உட்புற வளைவு

intrinsic energy : உள்ளார்ந்த ஆற்றல்: இரு தனிமங்கள் (எ-டு ஆக்சிஜன், கார்பன்) இணையும் போது ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் உண்டாகிறது. எனவே, அவை இணைவதற்கு முன்பே, அவற்றில் ஓரளவு வெப்பம் அடங்கியிருந்தது எனலாம். இது அவற்றின் உள்ளார்ந்த எரியாற்றல் ஆகும்

inwar, (மின்.) இன்வார்: மின் தடைப்பொருளாகப் பயன்படும், மிகக்குறைவான விரிவகற்சி அலகெண்ணுடைய நிக்கல் - எஃகு உலோகக் கலவை

invarstrut (தானி) கலவை எ.குக் காழ்: மிகக் குறைவான விரவகற்சி அலகெண்ணுடைய ஜெர்மன் வெள்ளி எஃகுக் கலவையில் செய்த தாங்கு காழ். இது உந்து தண்டுகளின் விளிம்புக்கும் தலைப் பகுதிக்குமிடையில் விரிவாக்கத்தைச் சமநிலைப்படுத்துவதற்காக அலுமினியம் உந்து தண்டுகளில் பொருத்தப் பட்டிருக்கும்

invention: புத்தாக்கப் புனைவு : புதிதாகப் புனைந்து உருவாக்கிய ஒரு கோட்பாடு, உத்தி அல்லது சாதனம்

inventory: விளக்க விவரப்பட்டி : ஒரு வாணிகத்தில் கையிருப்பிலுள்ள சரக்குகளின் அல்லது பண்டங்களின் இனவாரியான விவரப்பட்டி. அவ்வாறு பட்டியலிடப்பட்ட சரக்குகளையும் பண்டங்களையும் இது குறிக்கும்

inverse, தலைகீழ்த் தகவு: நிலை ஒழுங்கு உறவு முதலியவற்றில் தலைகீழ் எதிர்மாறான விளைவு

inverse square law: (மின்) தலைகீழ் வர்க்கவிதி : ஓர் இயற்பியல் அளவானது, மதிப்பில் தொலைவின் வர்க்கத்திலிருந்து குறைந்து வருகிறது என்னும் விதி. எடுத்துக் காட்டாக, ஆதாரத்திலிருந்து தொலைவின் வர்க்கத்திலிருந்து ஒளிர்வின் செறிவு குறைந்து கொண்டுவரும்

invert: (கம்மி.) தலைகீழ்ப் பகுதி : செங்குத்தாக இல்லாத ஒரு குழாயின் அல்லது நீர் செல்குழாயின் உட்புறத்தில் அடிப்பகுதி

inverted arch: (க.க) தலைகீழ் கவான: கவானின் வளைவு முகட்டுக்கல் மிகவும் கீழே அமைந்திருக்குமாறு அமைக்கப்பட்ட கவான்

inverted engine (வானூ) தலைகீழ் எஞ்சின் : நீள் உருளைகள் வணரி அச்சுத் தண்டுக்குக் கீழே அமைந்துள்ள ஓர் எஞ்சின்

inverted normal loop: (வானூ) தலைகீழ் இயல்பு வளைவு : விமானம் தலைகீழாகப் பறப்பதிலிருந்து தொடங்கி பாய்ச்சல், இயல்பாகப்