பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372

அணி அலங்கார அமைப்பு முக்கிய அம்சமாகும்

ionic valence bond : (மின்) அயனி ஒருங்கிணைவு : ஒர் அணுவின் புற வளையத்திலுள்ள எலெக்ட்ரான்கள், மற்றொரு அணுவின் புற வளையத்திற்கு எலெக்ரான்களைக் கொடுக்கும் வகையில் அணுக்கள் ஒருங்கிணைந் திருத்தல். எடுத்துக்காட்டு: ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் ஒருங்கிணைந்து நீர் உண்டாகிறது

ionization : (வேதி) அயனியாக்கம் : மின்பகுப்புப் பொருளாகப் பயன்படும் ஒரு கலவைப் பொருளை நேர்மின், எதிர்மின் அயனிகளாகப் பகுத்தல்

ionization potential : (மின்) அயனியாக்க ஆற்றல் : வாயு நிரப்பிய குழலில் அயனியாக்கம் நடைபெறும் வகையில் செலுத்தப்படும் மின்னழுத்தம்

ionosphere : (மின்) மீவளி மண்டலம்: பூமிக்கு மேலே 63-563கி.மீ. உயரத்திலுள்ள வாயுமண்டலப் படுகை. அங்கு, மிக அதிக எண் ணிக்கையில் நேர்மின் எதிர்மின் அயனிகள் அடங்கியிருக்கும்

ion spot : (மின்.) அயனிப்புள்ளி ; அயனித் தாக்கம் காரணமாக ஒரு படத்தின் மையத்தில் உண்டாகும் பழுப்பு நிறப்புள்ளி

ion tray : அயனிக் கவணை: தொலைக்காட்சிப் படக்குழாயின் நுனியில் அயனி எரியழிவினை அகற்றுவதற்குப் பயன்படும் ஒரு சாதனம்

iridescence : வண்ணக் கோலம் : வானவில்லின் வண்ணக் கோலத்தைக் காட்டும் தோற்றம்

iridium ; இரிடியம் (உறுதியம்) : பிளாட்டினம் குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளிபோல் வெண்மையான உலோகத் தனிமம். கடுமை வாய்ந்த இதன் அணு எண் 77

iris : ஒளி வகுப்பு மறைப்பு : தொலைக் காட்சியில் ஒளியை கட்டுப்படுத்தக்கூடிய சுருங்கி விரியக்கூடிய மறைப்பு

irish moss : ஐரிஷ் பாசி : கடற்பாசியி லிருந்து கிடைக்கும் ஒரு வகைப் பாசி, இதனை நீரில் கொதிக்க வைக்கும்போது, பாகு போல் மாறிவிடும். இதனை நெசவாலை, தோல் தொழில்களில் பயன்படுத்துகிறார்கள்

iron : இரும்பு : தொழில் உலகில் மிக முக்கியமாகப் பங்கு பெறும் உலோகத் தனிமம். தாதுக்களில் மற்றப் பொருள்களுடன் கலந்து இது கிடைக்கிறது. வார்ப்பிரும்பு, தேனிரும்பு. நெகிழ்விரும்பு, எஃகு என்ற வகைகளில் இரும்பு விற்பனையாகிறது

(2) தோலின் கனத்தை அளவிடுவதற்கான ஓர் அலகு.இது .053 செ.மீ அளவுடையது

iron-core inductor : (மின்) இரும்புப்புரி கிளர்மின் சுருள் : ஓர் இரும்புப் புரியின் மீது சுற்றப்பட்ட கிளா மின்னோட்ட மின் சுருள்

iron core transformer: (மின்) இரும்பு உட்புரி மின்மாற்றி: ஓர் இரும்பு உட்புரியினைச் சுற்றி மின் கம்பிச் சுருள்கள் சுற்றப்பட்டுள்ள ஒரு மின்மாற்றி, இதனால், மின் கம்பிச் சுருள்களில் அதிகக் காந்தப் பிணைப்பு கிடைக்கிறது

iron-oxide paint: அய ஆக்சைடு வண்ணச் சாயம்: அய ஆக்சைடு மண்ணிலிருந்து தயாரிக்கப்படும் வண்ணச் சாயம் ஆளிவிதை எண் ணெயுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது. உலோகங்களில் காப்புப் பூச்சுக்குப் பயன்படுத்தப்படுகிறது