373
iron-work: (க.க) இரும்பு வேலைப்பாடு: அலங்கார வேலைகளுக்காக இரும்பினைப் பயன் படுத்துதல். மத்திய காலத்துக் கட்டிடக் கலையில், கதவுக் கீல்கள். கதவு தட்டும் கைப்பிடிகள் போன் றவற்றிற்கு இரும்பு வேலைப்பாடுகள் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன
irradiation: (குளி.பத.) கதிரியக்கப் பதனாக்கம்: உணவிலுள்ள சில பாக்டீரியாக் களைக் கொல்வதற்காக உணவைக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துதல்
irregular curves : ஒழுங்கற்ற வளையம்: வளை வரைகளாக அல்லது வட்டங்களாக வளை இல்லாத கோடுகளை வரைவதற்காக வரைவாளர்கள் பயன்படுத்தும் ஒரு கருவி
irregular polygon: ஒழுங்கற்ற பல கோணக்கட்டம்: பக்கங்கள் ஏற்றத்தாழ்வான நீளங்களில் உள்ள பல்கோணக் கட்டம். பக்கங்கள் ஏற்றத்தாழ்வாக இருப்பதால் கோணங்களும் ஏற்றத்தாழ்வாக இருக்கும்
isinglass : (1) மீன் பசைக்கூழ்: மீன்களின் காற்றுச் சவ்வுப் பைகளிலிருந்து தயாரிக்கப்படும், ஒளி அரைகுறையாக ஊடுருவக்கூடிய ஒரு பொருள்
(2) ஒளிபுகு அப்பிரகம்
isobar: (இயற்.) சம அழுத்தக் கோடு: ஒரே வாயு மண்டல அழுத்தம் உள்ள இடங்களை இணைத்துக் காட்டும் கோடு
isocyanate resin: (குழை) ஐசோசயனேட்டுப் பிசின்: செயல் திறமுடைய ஹைட்ரஜன் அணுக்களுடன் ஐசோசயனேட்டுகள் எளிதாக இணைவதால், பிளாஸ்டிக் தொழிலில் யூரித்தேன் வேதியியல் என்னும் ஒரு புதிய தொழில்நுட்பத் துறையே தோன்றியுள்ளது. இந்த வேதியியல் நெகிழ்வும் விறைப்பும் உடைய நுரைப் பொருள் பற்றியதாகும்
isogonic lines: (அள) சரிசமக் காந்தக் கோண வரிகள்: காந்த ஊசியின் பிறழ்ச்சி குறிப்பிட்ட நேரத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் இடங்கள் அனைத்தையும் இணைக்கும் ஒரு படத்தின் மீது வரையப்பட்ட வரிகள்
isolating switch: (மின்) தனிப்படுத்து விசை: ஒரு மின்சுற்று வழியை அதன் விசை ஆதாரத்திலிருந்து தனியாகப் பிரித்திடப் பயன் படுத்தப்படும் விசை மின்சுற்று வழியினை வேறேதேனும் முறைகளில் திறந்திடும் போது மட்டுமே இது இயக்கப்படுகிறது
iso-metric: சமச் சீரான: ஒரே சீரான அளவுடைய
isopropyl alcohol: (வேதி) ஐசோபுரோப்பில் ஆல்கஹால் : தேய்ப்பு ஆல்கஹால்
isosceles: (கணி) இரு சமபக்கமுடைய: இரு சமபக்க முக்கோணத்தில் உள்ளது போன்ற சமநீளமான இருபக்கங்களையுடைய
isosceles triangle: சமபக்க கோணம்: இரு பக்கங்கள் சம அளவிலுள்ள ஒரு முக்கோணம்
isosotope: (வேதி) ஓரகத் தனிமம்: ஒரே பொருண்மையுடன் எடை மட்டும் வேறுபாடுடைய தனிமம். இதில் புரோட்டான்களின் எண்ணிக்கை ஒரே அளவாக இருக்கும்;ஆனால் நியூட்ரான்களின் எண்ணிக்கை வேறுபட்டதாக இருக்கும்
isothermal: (இயற்) சமபக்க நிலைக் கோடு: ஒரே சீரான சராசரி ஆண்டு வெப்ப நிலையுடைய இடங்களை இணைக்கிற கோடு