பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

396

புள்ளிகளால் அல்லது கோடுகளாலான வரை

lead hammer: (எந்) ஈயச் சுத்தியல் : ஈயத்தாலான கொண்டையுடைய ஒரு சுத்தியல். உறுப்புகளில் சிராய்வு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக எஃகுச் சுத்தியலுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது

lead hole : (எந்) முந்து துவாரம்: ஒரு பெரிய துவாரத்தைத் துரப்பணம் செய்வதற்கு அல்லது ஒரு சாய்வு தளத்தின் மீது மையத் துவாரமிடுவதற்கு வசதியாக ஓர் உலோகத் துண்டில் துரப்பணம் செய்யப்படும் துவாரம்

leading : (அச்சு.) வரி விரிவாக்கல் : அச்சுப்பணியில் வரிகளின் இடைவெளியை அகலமாக்குவதற்கு ஈயத் தகட்டுப் பாலங்களிட்டு அகலமாக்குதல்

leading angle : (மின் ) முற்செலுத்து கோணம் : ஒரு கொண்ம மின் சுற்றுவழியில் மின்னழுத்தத்தை முற்செலுத்துகிற மின்னாட்டத்தின் கோணம்

leading current : (மின்) முந்து மின்னோட்டம்: மின்னோட்டத்தை உண்டாக்கும் மின்னியக்க ஆற்றலின் முன்னோடியான உச்ச நீச அளவுகளை எட்டுவதற்கான மாற்று மின்னோட்டம்

leading edge : (வானூ) முந்து முனை: விமானத்தின் முற்சலுத்தி அலகு முனை. இதனை 'நுழைவு முனை' என்றும் கூறுவர்

lead joint - (கம்) ஈய இணைப்பு : ஒரு மணிக்கும் மூடு குமிழுக்கு மிடையிலான வளைவடிவ இடைவெளிக்குள் உருகிய ஈய்த்தை ஊற்றி, பின்னர் கூர்முனையை இறுகப் பொருத்துவதன் மூலம் செய்யப்படும் இணைப்பு

lead monoxide : (வேதி) ஈய மோனாக்சைடு (Pb0),: மஞ்சள் நிறமான அல்லது மஞ்சள் கலந்து சிவப்பு நிறமான தூள். ஈயத்தைக் காற்றில் சூடாக்குவதன் மூலம் பெறப்படுகிறது. ஈயக்கண்ணாடி மட்பாண்ட மெருகுப் பொருள் தயாரிக்கப் பயன்படுகிறது. கசிவு மூட்டுகளை அடைக்க கிளிசரினுடன் கலந்து சாந்தாகப் பயன்படுத்தப்படுகிறது

lead paint: (வண்) ஈய வண்ணச்சாயம் : சாதாரண வண்ணப் பொருள். இதில் வெள்ளை ஈயம் ஆதாரப் பொருளாகப் பயன்படுத்தப்படுவதால் இப்பெயர் பெற்றது

lead peroxide : (வேதி.மின்) ஈயப் பெராக்சைடு : (Pb02) ஓர் ஈயக் கூட்டுப் பொருள் மின்சேமக் கலங்களின் நேர்மின் தகடுகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன்

lead poisoning: ஈய நஞ்சு : வண்ணம் பூசுவோர் ஈயத்தில் அல்லது ஈயப் பொருட்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களைப் பாதிக்கும் ஒரு நோய்

leads : (அச்சு.) இடைவரிக் கட்டைகள் : அச்சு வேலையில் வரிகளின் இடைவெளியை அகலமாக்குவதற்கான உலோகத் தகடுகள். இவை அச்செழுத்து அலகுகளின் மடங்குகளில் தயாரிக்கப் பயன்படுகின்றன

lead screw (எந்) முன்னேற்றத் திருகு; திருகு வெட்டுக் கடைசல் எந்திரத்தின் படுகையின் முன் புறம் நீளவாக்கில் அமைந்துள்ள திருகு

lead sponge : (மின்) ஈயப்பஞ்சு: ஒரு சேமக் கலத்திலுள்ள எதிர் மின் தகட்டிலுள்ள செயல் திறமுடைய தனிமம்

lead storage cell ; ஈய சேமக்கலம் : கந்தக அமிலத்தின் மின்