பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
407

வாக இருக்குமாயின், அந்தக் கோணம் நேரவையாகும்

longitudinal section: (பட்) நீளப்பாங்கு வெட்டுவாய்: நீளவாக்கில் வெட்டப்பட்ட பகுதி

longitudinal stability: (வானூ) நீளப்பாங்கு உறுதிப்பாடு: விமானத்தில் சமதளச் சீர்மையில் ஏற்படும் உலைவினைப் பொறுத்த உறுதிப்பாடு

long letter: (அச்சு) நீள் எழுத்து: 'f' என்னும் ஆங்கில எழுத்தினைப் போன்று ஏறுமுக, இறங்குமுக வரைவுடைய அச்செழுத்து

long screw. (கம்) நீள் திருகு: சாதாரணத் திருகிழையைவிட அதிக நீளமுடைய 15.செ.மீ. நீள ஒரு கூர்ங்கருவி

long shunt compound connection : (மின்.) நீள் இணைக்கூட்டுப் பிணைப்பு: மின்னகமும் தொடர் வரிசைக் களச் சுருணையும் இணைந்த சுருணையுடன் குறுக்காக இணைக்களச் சுருணையை இணைக்கும் போது உண்டாகும் பிணைப்பு. இது குறுகிய இணைப்பிணைப்புக்கு மாறுபட்டது

longstroke: (தாணி.) நீள் உகைப்பு: துளையின் விட்டத்தை விடக் கணிசமான அளவு அதிக நீளம் உகைத்திடக் கூடியதான ஓர் எஞ்சின்

loom (மின்.) நெகிழ் காப்புறை: மின் கடத்திகளைக் காப்பதற்குப் பயன்படுத்தப்படும் நெகிழ் திறனுடைய உலோகமல்லாத குழாய்

loop: (வானூ.) கரண வளைவு: விமானம் செங்குத்தான மட்டத்தில் ஏறத்தாழ ஒரு வட்ட வளையமாகச் செல்லும் ஒரு கரண உத்தி

loop wiring: (மின்) கண்ணிக் கம்பியிடல்: மின்சுற்று வழியில் மின் கடத்திகளைக் கண்ணிகள் போல் பிணைத்து அமைத்தல்

loose dowel: தளர் இணைப்பாணி: இறுக்கமாகப் பொறுத்தப்படாத இணைப்பாணி இது வேண்டும்போது அகற்றுவதற்கு வசதியாக நகரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்

loose pulley: (எந்): தளர் கப்பி :எந்திரம் ஓடாதிருக்கும் போது அதை இயக்கும் வார்ப்பட்டை தளர்வாக ஓடுவதற்கான கப்பி. எந்திரம் இயங்கும் போது வார்ப்பட்டை தளர் கப்பியிலிருந்து விரைவாக இயங்கும் கப்பிக்கு மாற்றப்படும்

loper: சுழல் சக்கரம்: கயிறு திரிப்பதற்குப் பயன்படும் ஒரு சுழல் சக்கரம்

loss: ஆற்றல் இழப்பீடு: பயனுள்ள பணி எதுவுமின்றி ஆற்றல் வீணாகிப் போதல்

loss factor : (மின் :குழை ) இழப்புக் காரணி: விசைக்காரணியையும் மின்காப்பு நிலை எண்ணையும் பெருக்குவதால் கிடைக்கும் தொகை

lost motion: (எந்) இயக்க இழப்பு: இயக்க வேகத்திற்கும், இயக்கப்படும் உறுப்புகளின் வேகத்திற்குமிடையிலான வேறுபாடு. இது குறை பாடான இணைப்புகள், தளர்வுகள் காரணமாக ஏற்படலாம்

loudness: (மின்) ஒலி முனைப்பு : செவியுணர்வு மூலம் தீர்மானிக்கக் கூடிய ஒலியின் திறனளவு

loud speaker: (மின்) ஒலி பெருக்கி: அதிகத் தொலைவுக்கு ஒலிஎட்டும் வகையில் ஒலியைப் பெருக்குவதற்கான ஒரு சாதனம்

louis xv : (அ.க) லூயி xv பாணி ; ஃபிரெஞ்சு அரசன் பதினைந்தாம்