பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

406

lock stitch : பூட்டுத் தையல் : தையல் எந்திரங்களில் தைப்பது போன்ற ஈரிழைத் தையல்

lockup : (அச்சு.) முடுக்கிப் பூட்டுதல் : அச்சு எந்திரத்தில் அச்சுப் பதிப்புச் சட்டங்களை முடுக்கிப் பூட்டுதல்

lock washer : பூட்டு வளையம்: அழுத்த விற்சுருள் போல் வினை புரியும் பிளவு வளையம். ஒரு பூட்டு மரைபோல் செயற்படுகிறது

locust: (மர.வே.) இலவங்க மரம்: நடுநிலக்கடலக மரவகை, கடினமானது. நீண்டநாள் உழைக்கக் கூடியது. புற அலங்கார வேலைப்பாடுகளுக்கு ஏற்றது

lodestone:(கனிம) அயக்காந்தம் : இயற்கையான காந்தக்கல்; மாக்னட்டைட்

loess : (மண்.) மஞ்சள் வண்டல் : ஆற்றுப்பள்ளத்தாக்குகளில் படியும் களிமண் கலந்த சாம்பல், மஞ்சள் நிறமான வண்டல் படிவு. மிசிசிப்பி பள்ளத்தாக்கிலும், சீனாவிலும் 1.5 மீ. முதல் 305மீ. ஆழத்தில் கிடைக்கிறது

loft-dried paper: (தாள்) உயர் உள் தளக்காகிதம்: மேற்பரப்பு வடிவாக்கம் செய்யப்பட்டபின்பு உயர் தளத்தில் உலர்த்தப்படும் காகிதம்

log : (கணி) (1) மடக்கை : எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங்கெண்

(2) மரக்கட்டை : வெட்டப்பட்ட மரத்துண்டு

logarithm : (கணி) மடக்கை : எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங்கெண்

logarithmic scale: மடக்கை எண் அளவுகோல் : எண்களின் மடக்கைகளுக்கு வீத அளவில் இருக்குமாறு தொலைவுகள் குறிக்கிப்பட்டுள்ள ஓர் அளவுகோல்

loggia : (க.க.) படிமேடை இருக்கை : திறந்த பக்கங்கள் உள்ள படிமேடை இருக்கை

logical functions: தருக்கமுறைச் சார்பலன் : ஒரு குறிப்பிட்ட நிலையினைக் குறிக்கக் கூடிய ஓர் எண் கோவை

logo-type: (அச்சு.) சொற்பாள வார்ப்பு: அச்சு முறையில் இணையெழுத்து வார்ப்பு

logwood: (வேதி.) சாயமரம்: மத்திய அமெரிக்காவிலும், மேற்கிந்தியத் தீவுகளிலும் வளரும் ஒரு வகைச் சாய மர வகை. சாயத் தொழிலிலும், மருந்துகளிலும் பெருமளவில் பயன்படுகிறது

long. குழைமக் களிமண்: குழைமமாகவும் எளிதில் வேலைப்பாடு செய்வதற்கு ஏற்றதாகவும் உள்ள களிமண்

longeron: (வானூ.) நீள் உடற் பகுதி: விமானத்தின் நீட்டு வாட்டமான உடற்பகுதி

long fold: நீள் மடிப்பு: (தாள்.) காகிதத்தினை நீளவாக்கில் மடித்தல். இது 'அகமடிப்பு'க்கு எதிர்மாறானது

longitude: தீர்க்கரேகை: இங்கிலாந் திலுள்ள கிரீன்விச் போனற ஒரு நடுவிடத் திலிருந்து கிழக்கில் அல்லது மேற்கில் உள்ள தூரம்

longitudinal dihedral angle: (வானூ.) நிரைகோட்டு இரு சமதள முக்கோணம்: விமானத்தில் இறகுக்கும் சமநிலையமைவுக்குமிடை யிலான கோணத்தில் வேறுபாடு. இறகு அமைவுக் கோணத்தைவிட சகநிலையமைவுக் கோணம் குறை