பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

410

luminous: ஒளிர்திறனுடைய சுடர் ஒளி வீசுகின்ற அல்லது மின்னிடுகின்ற திறனுடைய

luminous paint: ஒளிரும் வண்ணம்: இருளில் ஒளிவிடுகின்ற திறனுடைய வண்ணப்பூச்சு

lump lime : கட்டிச் சுண்ணாம்பு: சுண்ணாம்புக் காளவாய்களில் எரிக்கப்பட்ட அல்லது புடமிடப்பட்ட சுண்ணாம்புக் கல்லிலிருந்து தயாரான கட்டிச் சுண்ணாம்பு

lunar base: (விண்) நிலவுத்தளம்: அறிவியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளில் ஒரு தளமாகப் பயன்படுத்துவதற்கு நிலவின் மேற்பரப்பில் நிறுவப்படும் கருவித் தொகுதிகள்

lunar gravity: (விண்) நிலவு ஈர்ப்பு: நிலவின் ஈர்ப்பு மையத்தை நோக்கித்துகள்களும் பொருள்களும் ஈர்க்கப்படுதல்

lunar probe: (விண்) நிலவு ஆராய்ச்சி: நிலவைப்பற்றியும் அதிலுள்ள நிலைமைகள் குறித்தும் ஆராய்தல்

lunar space: (அ.க.)நிலவு வெளி: நிலவின் அருகிலுள்ள வெளிப்பரப்பு

lunette: (அ.க.) தொங்கணிச் சர விளக்கு: கண்ணாடித் தொங்கணிகள் கொண்ட சரவிளக்கு

luster : (கணி.) பிறங்கொளி : ஒரு கனிமப் பொருளின் ஒளிப் பிரதிபலிப்புப் பண்பு காரணமாக பரப்பில் ஏற்படும் ஒளிர்வு

lute: கல மட்பூச்சு : காற்றுப் புகா மண்ணடைப் பூச்சு

(2) சீலைமண்: (1) காற்றுப் புகா மண்ணடைப் பூச்சுக்காகப் பயன்படும் பொருள்

lye (வேதி.) கடுங்கார நீர் : மாசு போக்கும் ஆற்றல் வாய்ந்த கழுவு நீர்ம வகை. சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH), அல்லது பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (KOH) போன்றவை இவ்வகையின. காரப்பொருள் உள்ள பொருளி லிருந்து கரைசலாக அல்லது துளாக இது எடுக்கப்படுகிறது. இது முக்கியமாக சோப்பு தயாரிக்கும் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது

lyophiliazation : நீரகற்றல் : உறைந்து போன ஒரு பொருளிலிருந்து பதக்கமாக்கல் நிலைகளில் நீரகற்றுதல்