பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
417

malachite : (கணி.) மாலாஷைட்: தாமிரத் தாதுக்களில் ஒன்று. பச்சை நிறமான, அடிப்படைத் தாமிரக் கார்போனேட். மேலேட்டுப் படிவங்களாகப் பெருமளவில் கிடைக்கிறது. 'மலைப்பச்சை' என்னும் பெயரில் வண்ணப் பொருளாகப் பயன்படுகிறது

malleable: நெகிழ் திறனுடைய: தங்கம் போன்ற உலோகங்களை உடைந்துவிடாதபடி தகடாக நீட்டத்தக்க நெகிழ்திறத் தன்மையுடைய

malleable cast iron: (உலோக.) நெகிழ்திற வார்ப்பிரும்பு : ஒரளவுக்குக் கரிம நீக்கம் செய்ய்ப்பட்ட வார்ப்பிரும்பு. இது சாதாரண வார்ப்பிலிருந்து வேறுபட்டிருக்கும். இதில் கட்டமைப்புக் கரணையாக இருப்பதறகுப் பதிலாக இழை இருக்கும். கடும் அதிர்ச்சிக்குள்ளாகும் உறுப்புகளைத் தயாரிக்க இது பயன்படுகிறது

malleablizing: (உலோக.) நெகிழ்திறனுரட்டுதல்: வெண்மையான வார்ப்பிரும்பிலிருந்து பெரும்பாலான கார்பனை அகற்றுவதற்காக அல்லது கார்பனைச் செம்பதமாக்கிய கார்பனாக மாற்றுவதற்காகப் பதப்படுத்தும் முறை

mallet: கொட்டாப்புளி: மரச்சுத்தி

maltose: (வேதி ) மால்ட்டோஸ்: மாவூறலிலிருந்து எடுக்கப்படும் படிக் வடிவச்சர்க்கரை. ரொட்டி தயாரிக்கப் பயன்படுகிறது

management: மேலாண்மை : நிருவாகம் செய்தல்; நெறிப்படுத்துதல்; கண்காணித்தல்; கட்டுப்படுத்துதல்

mandrel: (எந்.) குறுகு தண்டு: கடைசல் பிடிக்கும் எந்திரத்தின் நடுவச்சு. கடைசல் பிடிக்க வேண்டிய பொருளை இதில் பொருத்தி, இதனைச் சுழலச் செய்து கடைசல் வேலை செய்வார்கள்

mandrel stake: (உலோ. வே.) கடைசல் நடுவச்சு : கடைசல்பிடிக்கும் பொறியில் குழல்வடிவம் உருவாக்கப்பயன்படும் நீள் உருளைக் கோல்

maneuver : (வானூ.) நுட்ப இயக்கம் : (1) விமானத்தைத் தேர்ச்சித் திறனுடன் மிக நுட்பமாக இயக்குதல் (2) விமானத்தில் சுழன்று பறந்து சாதனை புரிதல்

maneuverability : (வானூ.) நுட்ப இயக்கத் திறன் : விமானத்தை எளிதாக இயக்குவதற்கு இடமளிக்கும் நுட்ப இயக்கத்திறன்

manganese: (கணி.) மாங்கனீஸ் (மங்கனம்) : கடினமான, எளிதில் உடைந்து போகக்கூடிய உலோகத் தனிமம். பழுப்பான வெண்மை நிறம் முதல் சிவப்பு நிறம் வரை பல வண்ணங்களில் கிடைக்கிறது. இது காந்தத் தன்மையற்றது. எஃகு கண்ணாடி, வண்ணங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது

manganese bronze : (உலோ.) மாங்கனீஸ் வெண்கலம் : ஒர் உலோகக் கலவை. இதில் 55%-60% செம்பு, 38% - 42% துத்தநாகம், சிறிதளவு வெள்ளீயம், மாங்கனீஸ், அலுமினியம், இரும்பு, ஈயம் கலந்திருக்கும். வன்மையும் வலிமையும் வாய்ந்த