பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
419

கைகளால் அல்லது கால்களால் இயக்கப்படும் விசை. இது மற்ற வழிகளில் இயக்கப்படும் விசைக்கு மாறானது

manufacturing: (தானி.) ஆக்கத்தொழில் : மனிதரின் தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ற பொருள்களை உற்பத்தி செய்தல்

manuscript : (அச்சு.) எழுத்துபடி : அச்சிடுவதற்குக் கையால் எழுதி அல்லது தட்டச்சு செய்து கொடுக்கப்படும் மூல வரைபடி

mar : பாழ்படுத்து : அழித்தல் அல்லது முழுவதும் பாழ்படுத்துதல்

marble : (க.க.) (1) சலவைக் கல்; பளிங்குக் கல்: வெண்மை, கரும்பழுப்பு, பழுப்பு வண்ணங்களிலுள்ள ஒரு வகைச் சுண்ணாம்புக்கல். கட்டிடங்களின் உட்புற, வெளிப்புற அலங்கார வேலைப்பாடுகளுக்கு மிகுதியும் பயன்படுகிறது. (2) பளிங்குத் தாள்: பளிங்கு போல் பளபளப்பாகத் தோற்றமளிக்கும் காகிதம்

marble dust: பளிங்குத் தூள்: அரைத்துத் தூளாக்கிய சுண்ணாம் புக்கல் மெருகு. சுண்ணத்தாள் தயாரிக்கப் பயன்படுகிறது

marblizing: (வண்.) பளிங்குத் தோற்றமளித்தல்: பல வண்ணச் சலவைக்கல் தோற்றமளிக்குமாறு மெருகேற்றுதல்

marbling: பளிங்கு வண்ணப்பூச்சு: பல்வண்ணச் சலவைக்கல் போல் தோற்றமளிக்கும் வகையில் மரத்தில் வண்ணம் பூசுதல்

marconi antenna: மார்க்கோனி வானலைவாங்கி : இயங்குவதற்குத் தரையைச் சார்ந்திருக்கும் ஒரு வகை வானலை வாங்கி

Marconi, Gugliemo : (மின்.) மார்க்கோனி, குக்ளிமோ(1874-1937): கம்பியில்லாத் தந்தியைக் கண்டு பிடித்த இத்தாலியப் புத்தமைப்பாளர். அட்லாண்டிக் கடலைக் கடந்து கம்பியில்லாத் தந்திமூலம் செய்தி அனுப்புவதில் 1901 இல் வெற்றியடைந்தார் 1909 இல் சி. எஃப் பிரானுடன் சேர்ந்து கூட்டாக நோபல்பரிசு பெற்றார்

margin : (அச்சு.) பக்க ஓரம் : அச்சுத்துறையில் பக்கங்களில் அச்சிடாது விடப்படும் பக்க ஒர இடம்

marginal note : (அச்சு.) ஓரக் குறிப்பு : பக்கங்களின் ஓர் இடத்தில் எழுதப்படும் குறிப்புகள்

marine glue : (மர.வே.) கடற்பசைப் பொருள் : ஒரு பகுதி கச்சா ரப்பர், இரு பகுதி அவலரக்கு, மூன்று பகுதி நிலக்கீல் கொண்ட பசைப் பொருள்

marker generator : (மின்.) குறியிடு மின்னாக்கி : வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஒருங்கிணைப்பு சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்து பார்ப்பதற்கான ஒரு கருவி. இதில் குறியிடு. அலைவெண்கள் 'பிப்' என்ற ஒலியை எழுப்பும்

marking - ink : குறியிடு மை : துணி குறியிடும் மை

marking awl: (மர.வே.) குறியிடு தமருசி: கடினமான மரத்தில் குறியிடுவதற்கான கூர்மையான எஃகுக் கருவி

marking machine: (மர.வே.) குறியிடு பொறி: வாணிக முத்திரைகள் புனைவுரிமைத் தேதிகள், ஆகியவற்றை வெட்டுக் கருவிகளிலும், துப்பாக்கிக் குழல்களிலும் பொறிப்பதற்குப் பயன்படும் எந்திரம்