பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

434

modulus of rigidity: (பொறி.) விறைப்பு நிலைதகவு: அழுத்தச் சறுக்குப் பெயர்ச்சி இழு விசையினால் சறுக்குப் பெயர்ச்சி அழுத்தத்தை வகுப்பதால் கிடைக்கும் ஈவு

mogul: (மின்.) மோகல்: 300 வாட்டுகளுக்கு அதிகமான பெரிய வெண்சுடர் விளக்குகளுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும் ஒரு குதைகுழி அல்லது கொள்கலன்

mohair: ஆங்கோரா ஆட்டுக் கம்பளி: ஆங்கோரா ஆட்டுமயிரைக் கொண்டு செய்யப்படும் நேர்த்தியான துணி வகை

Mohs scale : மோகஸ் அளவு: கனிமப் பொருட்களின் கடினத் தன்மையைத் தரம் பிரித்துக் காட்டப் பயன்படும் எண்மான முறை

moisture content: (அச்சு.) நீர் நயப்பு: தயாரித்து முடித்த காகிதத்தில் உள்ள ஈரப்பதனின் அளவு

molar solution: (வேதி) மூலக் கூற்றுக் கரைசல்: ஒரு கரைவத்தின் மூலக்கூற்று எடையைக் கொண்டுள்ள ஒரு கரைசல். இது ஆயிரம் கன செ.மீ.யில் இல்வளவு கிராம் என்று குறிக்கப்படும்

molar teeth: (உட.) பின்கடைவாய்ப் பற்கள்: பின்கடை வாய்ப் பல் வகையில் அரைக்க உதவுகிற பற்கள். இவை மேல், கீழ்தாடைகளில் ஒவ்வொரு பக்கத்திலும் கடைசியில் 3 தட்டையான பற்கள் வீதம் அமைந்திருக்கும்

mould: (வார்.) வார்ப்படம்: வார்ப்புருக்களை உருவாக்குவதற்கான ஒரு படிவம்

பிளாஸ்டிக் உருவங்களை வெப்பம், அழுத்தம் அல்லது வேதியியல் வினை மூலமாக உருவாக்குவதற்குப் பயன்படும் உலோகக் கொள்கலம். அச்செழுத்துகளை வடிவமைக்கும் வார்ப்பட எந்திரம்

mould board: (மர.வே.) முனைப் பலகை: உழுசாலில் மண்ணைப் பெயர்த்துத் தள்ளும் எஃகு முனைப் பலகை

moulders rammer: (வார்.) வார்ப்படத் திமிசுக்கட்டை: வார்ப்புடப்தை அடித்து இறுக்குவதற்குப் பயன்படுத்தப்படும் உருளை வடிவ மரக் கருவி

moulding: (க.க.) வார்ப்பட உருவம்: கட்டிடம், மரவேலை முதலியவற்றில் வார்ப்பட முறையில் செய்யப்படும் சித்திர வேலைப் பாடு

moulding board: (குழைம.) பிசைவுப் பலகை : வார்ப்படப் பொருட்களை வலுவாக்குவதற்காகப் பயன்படும் அழுத்திய தகடுகள், கலப்பு இழைகள், பிசின்கள் ஆகியவை

moulding plane : வார்ப்பட இழைப்புளி: வார்ப்படங்களை வெட்டியெடுப்பதற்குப் பயன்படும் சிறிய இழைப்புளி

moulding sand: (வார்.) வார்ப்பட மணல்: வார்ப்படங்கள் செய்வதற்குப் பயன்படும் வார்ப்பட மணல்

mole: (வேதி.) மூலக்கூற்று எடை: கிராம்களில் குறிப்பிடப்படும் மூலக்கூற்று எடை

molecular theory: (வேதி.இயற்.) மூலக்கூற்றுக் கோட்பாடு: சடப் பாருட்கள் 'மூலக்கூறுகள்' எனப்படும் நுண்ணிய துகள்களினாலானது என்றும், ஒவ்வொரு துகளும் அந்தப் பொருள் முழுமைக்குமுள்ள குண இயல்புகளைக் கொண்டிருக்கும் என்றும் கூறும் கோட்பாடு

molecular weight: (இயற்.) மூலக்கூற்று எடை: ஒரு ஹைட்