பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
437

வங்களை வார்த்து அமைக்கும் அச்சுக்கோப்பு எந்திரம்

mordant : அரிகாரம் : செதுக்குருவக்கலையில் பயன்படுத்தப்படும் அரிமானப் பொருள் சாயத்தைக் கெட்டிப்படுத்தப் பயன்படுத்தப்படும் நிறம் கெட்டி யாக்கும் சரக்கு

moresque : அராபிய பாணி : வட மேற்கு ஆஃப்ரிக்க அராபிய இஸ்லாமியர் பாணிக்குரிய வேலைப் பாடு

morocco goat skin ; பதனிட்ட வெள்ளாட்டுத் தோல் : சாயப் பதனீட்டு இலைத் தூள் கொண்டு பதனிடப்பட்ட வெள்ளாட்டுத் தோல். இது பல வண்ணங்களில் கிடைக்கிறது. கனத்த தோல்களில் அக உறையாகவும், புத்தகக் கட்டுமானத்திலும் பயன்படுகிறது

morse code : (மின்) மோர்ஸ் குறியீடு : மோர்ஸ் என்பார் அமைத்த தந்திப் பதிவுக் குறியீட்டு முறை. இந்த முறையில் எழுத்துகளையும், எண்களையும் குறிக்கும் புள்ளிகள், கோடுகள் மூலம் செய்திகள் அனுப்பப்படுகின்றன

morse taper : (எந்.) மோர்ஸ் கூம்புச் சரிவு : துரப்பணத்தண்டுகளையும், மற்றக் கருவிகளையும் எந்திரக் கதிர்களுடன் பொருத்துவதற்குரிய 0 முதல் 7 வரையிலான திட்ட அளவுக் கூம்புச் சரிவு

mortar : (1) கல்வம் : உலக்கையால் பொருள்களை இடித்துத் தூளாக்குவதற்குப் பயன்படும் கனமான சுவருடைய குழியுரல்

(2) சாந்து : காரை, சுண்ணாம்பு. மணல் கலந்த சாந்து

mortar board : (க.க) சாந்துத் தட்டு : காரைச் சாந்து வைப்பதற்கு அடியில் கைப்பிடியுள்ள ஒரு சதுரத் தட்டு

mortar box : (க.க) சாந்துக் கலவைப் பெட்டி : சாந்து கலப்பதற்குப் பயன்படும் பெரிய பெட்டி அல்லது தொட்டி

mortar joints: சாந்து இணைப்புகள்: செங்கல் அல்லது காரைக் கட்டுமானப் பணிகளில் சாந்து கொண்டு அணைப்பதற்கான பல்வேறு பாணிகள்

mortise : (அச்சு.) துளைப் பொருத்து: பொருத்து முளையிடும் துளைச்சட்டம்.அச்சுக் கலையில் அச்சுத் தகட்டில் எழுத்துக்களைச் செருகுவதற்குகான வாயில்

mortise chisel : (,மர.வே) துளைப் பொருத்து உளி : துளை பொருத்திடும் தடித்த அலகுடைய உளி

mortise gauge : (மர.வே.) துளைச் சட்டமானி: தேவையான அகலத்திற்குத் துளைச் சட்டத்தினை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கருவி

mortise lock :(க.க) துளைச் சட்டப் பூட்டு துளைச்சட்டத்துடன் பொருத்தப்படும் பூட்டு

mortising machine:(மர.வே) துளைப் பொருத்து எந்திரம் : மரத்தில் உளியாலோ சுற்று வெட்டு மூலமாகவோ துளைச் சட்டம் வெட்டுவதற்கான ஓர் எந்திரம்

mosaic : பல் வண்ணப் பட்டை : தரையில் பல வண்ணப் பட்டைகளினால் அணிசெய்தல்

mother-of-pearl: முத்துக் கிளிஞ்சல் : கிளிஞ்சல்களின் உட்புறத்திலுள்ள பளபளப்பான பொருள். பொத்தான் போன்ற சிறிய