பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
445

negative plate: (மின்.) எதிர்மின் தகடு: (1) ஒரு சேமிக்கலத்தில் உள்ள கடற்பஞ்சு போன்ற ஈயத் தகடு. இது மின்னியக்கத்தின் போது எதிர்மின் தகடாக அல்லது எதிர்மின் வாயாகச் செயற்படுகிறது (2) ஓர் அடிப்படை மின்கலத்தில் கார்பன், செம்பு, பிளாட்டினம் முதலியவை எதிர்மின் வாயாகச் செயற்படுகின்றன

negative resistance: (மின்.) எதிர்மின் தடை: ஒரு மின்சுற்று வழியில் மின்னழுத்தம் அதிகமாகும் போது மின்னோட்டம் குறைகின்ற ஒரு நிலை.

negative side of circuit: (மின்) மின்சுற்று வழியின் எதிர்மின் பாதை: ஒரு மின்சுற்று வழியில் மின்விசை நுகர்வுச் சாதனத்திலிருந்து மின் வழங்கும் ஆதாரத்திற்குத் திரும்பிச் செல்லும் மின் கடத்து பாதை

negative temperature coefficient (மின்.) எதிர் வெப்பக் குணகம்: வெப்ப நிலையில் ஏற்படும் ஆக்க முறையான மாறுதல் காரணமாக அலைவெண், மின்தடை போன்ற பண்புகளில் உண்டாகும் எதிர்மறை மாறுதல்

neon :(மின்.) நியோன்: செவ்வொளி விளக்குகளில் பயன்படுத்தப்படும் செயலற்ற நிறமற்ற தனிம வாயு. இது மற்றப் பொருள்களுடன் வினைபுரிவதில்லை. செவ்வொளி விளக்குகளில் நிரப்பப் பயன்படுகிறது

neon light: (மின்.) நியோன் விளக்கு: மின் இழைக்குப் பதிலாக இரு மின் முனைகளைக் கொண்ட ஒரு வகை விளக்கு. குழாயினுள்ளிருக்கும் செவ்வொளி வாயு அயனியாகும் போது ஒளி உண்டாகிறது. விளம்பரங்களில் இந்த விளக்குகள் பெருமளவில் பயன்படுகின்றன

neon - light ignition timing: (தானி.) செவ்வொளிச் சுடர்மூட்ட நேரம்: உந்து ஊர்தியின் எஞ்சினில் ஒரு சிறிய செவ்வொளி விளக்கினை கம்பிகள் மூலமாகத் தொடரிலுள்ள சுடர் மூட்டக் கம்பியின் துணைமின் சுற்றுவழியின் கம்பிகளை முதல் எண் சுடர்ப்பொறிச் செருகுடன் இணைப்பதன் வாயிலாக, முறிப்பான் தொடும் போதும் விடும்போதும் ஒளி மின்னுகிறது. சமனுருள் சக்கரத்தில் அல்லது அதிர்வு அடக்கியில் உள்ள காலக் குறியீட்டில் நேரடியாக ஒளி மின்னும் போது எஞ்சின் உரிய இயக்க நேரத்தில் இருப்பதாகக் கண்டு கொள்ளலாம்

nep; பருத்தி முடிச்சு: பருத்தியில் குறைந்த உருட்சி அல்லது மட்டமான விதை நீக்கம் காரணமாக ஏற்படும் சிறிய முடிச்சுகள்

nernst lamps (மின்.) நெர்ன்ஸ்ட் விளக்கு: ஒருவகை வெண்சுடர் விளக்கு. இதிலுள்ள ஒளிரும் பகுதியில் அரிய மண்களின் உருகா ஆக்சைடுகளினாலான ஒரு பென்சில் இருக்கும்

nested tables: கூண்டு மேசை: பயன்படுத்தாத போது ஒன்றுக்குள் ஒன்றைச் செருகி வைத்துக்கொள்ளத் தக்கவாறு அமைக்கப்பட்டுள்ள ஒரு மேசைத் தொகுப்பு. இது பொதுவாக நான்கு அடுக்குகளைக் கொண்டிருக்கும்

nest of saws, (மர.வே)தொகுப்பு ரம்பம்: ஒரே கைப்பிடியில் பயன்