பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

446

படுத்தக் கூடிய பல்வேறு நீளங்களைக் கொண்ட அலகுகள் அமைந்த வட்ட வடிவ ரம்பங்களின் தொகுதி. இலேசான வேலைப்பாடுகளுக்குப் பயன்படுகிறது

nest plates (குழை) தொகுப்புத் தகடு: வார்ப்படங்களை உட்செலுத்துவதற்குப் பயன்படும் உட் குழிவுப் பாளங்களுக்கான பள்ளப் பகுதியைக் கொண்ட காப்புத் தகடு

neutral: (தானி ) இயங்காநிலை: விசையூக்க எந்திரத்தில் இயக்கம் ஊட்டாது இயங்கும் பகுதியின் நிலை. இந்நிலையில் வேகமாற்றப் பல்லினை பொருந்தாமலிருக்கும். மின்னியலில் நேர்மின்னாகவோ எதிர்மின்னாகவோ இல்லாமல் இருக்கும் நடுநிலை இணைவு

neutral axis: (பொறி) நொதுமல் அச்சு: ஓர் எளிய விட்டத்தில் மேற்புற இழைகள் எப்போதும் அமுக்கத்தில் இருக்கும். அப்புற இழைகள் எப்போதும் விறைப்புடனிருக்கும். எனவே, இழைகள் அமுக்கத்திலோ விறைப்புடனோ இல்லாத ஒரு புள்ளி இருக்க வேண்டும். இந்தப் புள்ளி தான் அப் பகுதியின் 'நொதுமல் அச்சு' எனப்படும்

neutral conductor: (மின்.) நடுநிலை மின்கடத்தி: இரு மின் கம்பி முறையில் தரையுடன் பொருத்தப்பட்டுள்ள மின்கம்பி. மூன்று மின் கம்பி முறையில் தரையுடன் பொருத்தப்பட்டுள்ள மூன்றாவது மின் கம்பி

neutral flame: நடுநிலைச் சுடரொளி: வாயு மூலம் பற்ற வைப்பதற்கான சுடரொளி. இதில் முழுமையான உள்ளெரிதல் இருக்கும்

neutralization: (வேதி) செயலற்ற தாக்குதல்: அமிலக் கரைசலில் காரத்தைச் சேர்ப்பது போல், மாறான விளைவினால் பயனற்ற தாகவோ செயலற்றதாகவோ ஆக்குதல்

neutral position : (தானி.) நடுநிலை: உந்து ஊர்தியை இயக்காமல் எஞ்சின் மட்டும் ஓடிக் கொண்டிருப்பதற்கு இடமளிக்கும் வகையில் மாற்றுப் பல்லிணைகளை ஒன்றையொன்று தொடாமலிருக்கச் செய்யும் பல்லிணை மாற்று நெம்புகோலின் நிலை

neutral wire: (மின்.) நடுநிலை மின்கம்பி; சமநிலை மின்கம்பி. மூன்று கம்பிகள் கொண்ட மின் வழங்கு முறையில் கட்டுப்பாட்டு மின்கடத்தி. இந்தக் கம்பி சம நிலையற்ற மின்னோட்டத்தை எடுத்துச் செல்கிறது

neutrino: (மின்.) நியூட்ரினோ: ஒரு நியூட்ரான் உடைந்து அல்லது சிதைந்து ஒரு புரோட்டானாகவும், ஓர் எலெக்டிரானாகவும், மாறுவதன் காரணமாக உண்டாகும் மின்னூட்டம் பெறாத துகள்

neutrodyne: (மின்.) நடுநிலை விசையழுத்தம்: கொண்மிகளைச் செயலற்றதாக்குவதன் மூலம் தேவையற்ற மின்னூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வானொலி மின்சுற்று வழி

neutron: (இயற்.) நியூட்ரான்; நொதுமம்: மின்னியக்கமில்லாத சிற்றணு மூன்று அடிப்படை அணுத் துகள்களில் ஒன்று. இது புரோட்டான் போன்றே எடையுள்ளது. ஆனால் இதில் மின்னேற்றம் இராது

nevvel: (க.க.) நடுத்தூண்: சுழற் படிக்கட்டின் உச்சியில் அல்லது அடியில் உள்ள நடுக்கம்பம்

news: பத்திரிகைக் காகிதம்: அடி மரக்கூழிலிருந்து தயாராகும் ஒரு