பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
449

(2) நைட்ரிக் அமிலத்துடன் அல்லது ஒரு கூட்டுப் பொருளுடன் மூல அடிப்பொருளோ வெறியமோ சேர்வதால் உண்டாகும் உப்பியற் பொருளிலிருந்து கிடைப்பது

nitric: (வேதி.) நைட்ரிக்: நைட்ரஜனிலிருந்து அல்லது நைட்ரஜன் தொடர்பான பொருள்

nitric acid: (வேதி.) நைட்ரிக் அமிலம்: சோடியம் அல்லது பொட்டாசியம் நைட்ரேட்டைக் கந்தக அமிலத்துடன் கலந்து சிதைத்து வடிப்பதால் உண்டாகும் அமிலம். நிறமற்றது. மிகுந்த அரிக்கும் தன்மை கொண்டது

nitriding : (வேதி.) நைட்ரஜனேற்றம் : இரும்பை ஆதாரமாகக் கொண்ட உலோகக் கலவைகளில் நைட்ரஜனை ஏற்றும் செய்முறை. உலோகக் கலவையை அம்மோனியா வாயுவுடனோ வேறேதேனும் நைட்ரஜனியப் பொருளுடனோ கலந்து சூடாக்குவதன் மூலம் நைட்ரஜன் ஏற்றலாம்

nitrogen : (வேதி.) நைட்ரஜன் : காற்று மண்டலத்தில் ஐந்தில் நான்கு பகுதியாகவுள்ள வாயுத்தனிமம். நிறமற்றது; மணமற்றது

nitroglycerin : (வேதி.) நைட்ரோகிளிசரின் : வெடிப்பாற்றல் மிக்க மஞ்சட் கலவை நீர்மம். இளமஞ்சள் நிறத்திலோ நிறமற்றதாகவோ இருக்கும். எண்ணெய்ப் பசையுடையது. கிளிசரின், கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மிகுந்த வெடிப்பாற்றல் வாய்ந்தது, களிமண்ணுடன் கலந்து சுரங்கவெடி தயாரிக்கப்படுகிறது

noble metal : (வேதி.) துருப்படாத உலோகம் : விலையுயர்ந்த அல்லது தூய உலோகத்தைக் குறிக்கும் சொல். எளிதில் துருப்பிடிக்காத உலோகங்களையும் குறிக்கும்

nodes : (மின்.) அதிர்வு மையப் புள்ளி : அதிர்வுடைய பொருளின் அதிர்வு மையப் புள்ளி

nogging : (க.க.) மரக்கட்டு மானம் : மரச்சட்டத்தில் செங்கல் வேலைப்பாடு அமைத்துக் கட்டுமானம் செய்தல்

noheet metal: செம்பத உலோகம்: இதனைச் 'செம்பத ஈயம்' என்றும் கூறுவர். இது சோடியத்துடன் கலந்து கெட்டியாக்கிய ஈயத்தைக் கொண்ட உராய்வுத் தடுப்பு உலோகம்

noil : கம்பளிச் சீவல் : குறுகிய கம்பளிச் சீவல் உல்லன் நூல்களுக்குப் பயன்படுகிறது

noise figure: (மின்.) ஒலி வீதம் :மின்மப் பெருக்கிகளில் (டிரான்சிஸ்டர்) கோட்பாட்டளவிலான ஒலிவிசையில் உள்ளபடியான ஒலி விசையின் வீத அளவு. இது டெசிபல்களில் குறிக்கப்படுகிறது

noise limiter: (மின்.) ஒலி வரையறுப்பான் : ஒலிவாங்கி மூலம் ஒலி திடீரென உயர்வதைத் தடுக்கக்கூடிய தனிவகை மின் சுற்றுவழி

no load voltage : (மின்.) பளுவிலா மின்னழுத்தம் : ஒரு மின் கலத்தில் புறமின் சுற்றுவழியில் மின்னோட்டம் பாயாமலிருக்கும் போது உள்ள முடிவான மின்னழுத்தம்

nomen clature: (பொறி.) கலைச்சொல் : ஒரு குறிப்பிட்ட கலையில் அல்லது அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் தனிச் சொற்களின் தொகுதி

nonconductor : (மின்.) மின் கடத்தாப் பொருள்: தன்வழியாக மின்விசை செல்வதை அனுமதிக்காத ஒரு பொருள்

noncorrosive flux : அரித் திடா உருகு பொருள்: பற்றாசு வைத்தல்