பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

458

துளையுள்ள உலோகத்தினால் செய்யப்படுகின்றன

(2) காரீயகச் செருகிகள் கொண்ட வெண்கலத் தாங்கிகள்

oil line: (தானி.) எண்ணெய் குழாய் அமைவு: மசகு எண்ணெய்க்கான சுற்று வழியினையுடைய குழாயும் அதனுடன் இணைந்த சாதனங்களும்

oil pump; (தானி.) எண்ணெய் விசைக் குழாய்: எண்ணெய் விசைக் குழாய்களில் பல்லிணை வகை. இதழ் வகை, குண்டல வகை எனப் பல வகை உண்டு. இவை பெரும்பாலும் எஞ்சினின் இணைபிரியா அங்கமாக அமைந்திருக்கும். சேமிப்புக் கலத்திலிருந்து எண்ணெயை மேல்மட்டங்களுக்கு இறைப்பதற்கு இவை பயன்படுகின்றன

oil stone: (மர.வே.) சாணைக் கல்: கருவிகள் முதலியவற்றை கூரமையாக்குவதற்கான எண்ணெய் ஊட்டப்பட்ட தீட்டுக்கல்

oil-tank vent: (வானூ) எண்ணெய்க் கலப்புழை: எஞ்சினிலிருந்து எண்ணெய்க் கலத்திற்கு எண்ணெய் ஆவிகளைச் செலுத்து வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பெரிய குழாய்

oil tannage: எண்ணெய் பதனிடல்: தோல் பதனிடுவதற்கான மிகப் பழைய முறை. இக் காலத்தில் சில வகை எண்ணெய்களுடனும், மென் கொழுப்புகளுட னும், சேர்த்துப் பிசைந்து தோல் பதனிடப்படுகிறது. வரை மான் தோல், எருமைத்தோல், மான் ஆகியவற்றை பதனிட இம்முறை பயன்படுகிறது

oil varnish : (,மர.வே) எண்ணெய் வண்ண மெருகு : ஆளிவிதை எண்ணெய், மரப்பூச்செண்ணெய் போன்று உலரும் எண்ணெய்களைக் கொண்ட வண்ண மெருகு ஆக்சிகரணம் மூலமாக மெதுவாகக் கெட்டியாதல் நடைபெறுகிறது

oleaginous: (வேதி.) எண்ணெய்ப் பசை : எண்ணெயின் இயல்புடையது

olefine : (வேதி.) ஒலிஃபைன் : எத்திலின் குடும்பத்தைச் சேர்ந்த வேதியியற் பொருள்

oleo gear: (வானூ.) எண்ணெய்ப் பல்லிணை: எண்ணெய் பூசக்கூடிய ஒரு சாதனம். இது ஒரு துவாரத்தின் வழியாகச் செல்லும் எண்ணெய் பாய்ந்து பல்லிணைக்கு மசகிடுகிறது

olive : தேவதாரு : மெதுவாக வளரும் ஒருவகை மரம். நெருக்கமான குருணை மணிகள் உடையது. கனமானது. இளமஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். அதில் அடர்பழுப்பு நிறப்புள்ளி களும் பட்டைகளும் அமைநதிருக்கும். நுட்ப வேலைப்பாட்டுப் பொருள்கள் செய்யப் பயன்படுகிறது

omega; ஒமேகா : கிரேக்க நெடுங் கணக்கின் கடைசி எழுத்து

omnigraph : தானியங்கிக் கத்தி : தானியங்கி அசிட்டிலின் கத்தி. இதில் ஓர் எந்திரமுனை அமைந்திருக்கும். அது சுத்தியின் இயக்கத்திற்கேற்ப உருவங்களைச் செதுக்கும். இதன் உதவியுடன் ஒரே சமயத்தில் பலபடித் தகடுகளை வெட்டி எடுக்கலாம்

oneside coated :ஒருபக்கப் படலத் தாள் : ஒரு பக்கம் மட்டுமே படலப் பூச்சுடைய கற்பாள அச்சுத் தாள்

onion skin: சருகுத் தாள்; தட்டச்சில் படியெடுப்பதற்குப் பயன்படும் மிக மெல்லிய தாள்