பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

494

எடை குறைந்தது. வெள்ளை அல்லது இளம் பசு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதில் எளிதில் வேலைப் பாடுகள் செய்யலாம். கலைப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது

poppet: (எந்.) கடைசல் தலை:கடைசல் எந்திரத்தின் தலைப்பாகம்

poppet volves: (பொறி.)கடைசல் திருகு: தானியங்கிப் பொறியியலில் பயன்படக் கூடிய வட்டத் தகடு, தண்டோடும் கூடிய கடைசல் திருகுக் கருவி


рорру heads: (க.க.) ஒப்பனை முகடு: திருக்கோயில் இருக்கை முனையின் ஒப்பனை முகடு

porcelain: பீங்கான்: சீனாக் களிமண் அல்லது வெண் களிமண் செய்யப்படும் பீங்கான் கலங்கள்

porch: (க.க.) புகுமுக மண்டபம்: ஒரு கட்டிட்த்தின் முகப்பில் தனிக் கூரையுடன் கூடிய மண்டபம்

porosity: கசிவுத்திறன்: உலோகம் அல்லது பிற பொருட்களின் வழியாக அழுத்தப்படும் போது காற்று, வாயு அல்லது திரவம் கசியும்படி செய்யும் திறன்

porosity: (பற்.) நுண்துளை: உலோகத்திலுள்ள வாயுக்கள் அல்லது வெற்றிடங்கள்

port; (தனி.) காற்றுப்புழை: எஞ்சினின் உள்ளெரி அறைக்குள் எரிபொருள் செல்வதை அனுமதிக்கக் கூடிய அல்லது வாயுக்கள் வெளியேற அனுமதிக்கக்கூடிய ஒரு வழிப்புழை

portal: (க.க.) நுழைவாயில்: அணிவாயிற் கதவம் அல்லது அணி கெழுவாயில், பொதுவாக பெரிய கட்டிடங்களில் உள்ளது

portal vein: (உ.ட.) : கல்லீரல் சிரை: சீரண உறுப்புகளிலிருந்து கல்லீரலுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் இரத்த நாளம். இது மற்றச் சிரைகளிலிருந்து மாறுபட்டது. ஏனென்றால், இது இதயத்திற்கு நேரடியாக இரத்தத்தைக் கொண்டு செல்வதற்குப் பதிலாகத் தந்துகிகள் என்னும் சிறு இரத்த நாளங்களாகப் பிரிகின்றது

portico: (க.க.) மூடு மூன்றில்: துரண்கள் தாங்கும் கூரையுடைய இடம், பொதுவாக ஒரு கட்டிடத்தில் நுழைவாயிலிலுள்ள புதுமுக மண்டபம்

portiere: (அ.க.) கதவத்திரை: கதவுநிலையில் பயன்படுத்தப்படும் ஒரு திரை

portland cement: (க.க.) சீமைக்காரை:சீமைச்சுண்ணாம்பு. களிமண் ஆகியவற்றால் செய்யப்படும் செயற்கைப் பசைமண்

positive; ஒளிப்பட நேர்படிவம்: ஒளிப்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படிவம். இது மறி நிலைப் படிவத்திற்கு எதிர்மாறானது

positive carbon: (மின்.) நேர்மின் கார்பன்: நேர்மின்னோட்டச் சுடர் விளக்குகளில் ஏற்படும் கார்பன் குழி

positive electricity: (மின்.) நேர்மின்னாற்றல்: கண்ணாடியைப் பட்டுத் துணியில் தேய்ப்பதால் ஏற்படும் மின்னாற்றல்

positive group: (மின்.) நேர்மின் குழுமம்: ஒரு பொதுவான மின் முனையத்துடன் இணைக்கப்பட் டுள்ள பல சேமக் கலத்தகடுகளின்