பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
515

தின்போது அணுவின் உட்கருவிலிருந்து எரியாற்றல் வெளிப்படுகிறது

radio-astronomy: கதிரியக்க வானியல்

radio broadcasting: வானொலி ஒலிபரப்பு: செவிப்புலன் ஆற்றலை வானொலி ஆற்றலாக மாற்றி வானொலி அலைகளின் வடிவில் அனுப்புதல்

radio channel: வானொலி அலைவரிசை: வானொலி, தொலைக் காட்சி அலை அடையாளக் குறியீடுகளை இடையீடின்றி அனுப்பித் தரும் அலை இடைப்பகுதி. இன்றையத் தொலைக்காட்சி வரையளவுகளின்படி, ஓர் அலை வரிசை என்பது 6 மெகா சைக்கிள் அகல் விரிவுடையது

radio communication : வானொலிச் செய்தித் தொடர்பு: வானொலி ஆற்றல் மூலமாக வாய்மொழிச் செய்தியை அல்லது குறியீட்டுச் செய்தியை அனுப்புதல்

radio compass: (வானூ.) : வானொலித் திசைகாட்டி: கதிரியக்கத் தத்துவத்தின் மூலம் திசைகளைக் குறித்துக் காட்டும் கருவி. இது வானொலி ஒலிபரப்புப் பெட்டியில் அமைந்திருக்கும். அதை நோக்கியே இதன் முள் திரும்பி இருக்கும். இதன் முள் வடக்குத் திசையை நோக்கி இருக்காது

radio direction finder: (இயற்.) வானொலித் திசை காட்டி : வானொலிச் சைகை எந்தத் திசையிலிருந்து அனுப்பப்படுகிறது என்பதை நிருணயிப்பதற்கு வடிவமைக்கப்ப்ட்டுள்ள வானொலி வாங்கி. இது மீகாமத்தில் பயன்படுகிறது

radio frequency : (மின் வானொலி அலைவெண் : வானொலிச் சைகைகளை அனுப்புவதில் பயன்படுத்தப்படும் மின்னலைகளின் அலைவெண். இது ஏறத்தாழ வினாடிக்கு 40.000-க்கும் 30,000,000க்கும் இடைப்பட்ட அதிர்வுகளைக் கொண்டிருக்கும்

radio meter : சைகை இயக்கமானி : கப்பல்களிலிருந்தும் விமானங்களிலிருந்தும் அனுப்பப்படும் கம்பியில்லாச் சைகைச் செய்திகளிலிருந்து அவை இருக்கும் திசையைக் கண்டுபிடிக்கும் கருவி

radiogram : கம்பியில்லா ஒலிபரப்புச் செய்தி : வானொலி வாயிலாக அனுப்பப்பட்டு, ஏதோவொரு வழியில் முகவரியாளருக்கு அஞ்சல் செய்யப்படும் செய்தி

radiograph : வெயில்மானி: வெயிலின் செறிவையும் வெயில் காயும் நேரத்தையும் பதிவு செய்வதற்கான கருவி

radiography : (மின். ) ஊடுகதிர்ப் படமெடுப்பு : ஊடுகதிர்கள் (எக்ஸ் ரே) படும்படி செய்து ஒரு பொருளை ஆராய்வதற்கான ஒளிப்பட அறிவியல்

radioisotope: (வேதி.) கதிரியக்க ஓரகத் தனிமம் : கதிரியக்கமுடைய ஒரு தனிமத்தின் வடிவும். இது தனிமத்திற்கு இயற்கையாக அமைந்திருக்கலாம் அல்லது அனுப்பிளப்பு போன்ற வேறு அணுவியல் மாறுதல்கள் மூலம் உண்டானதாக இருக்கலாம்

radiology : (மருத்.) ஊடுகதிர் கதிரியக்க மருத்துவம்: ஊடுகதிர் (எக்ஸ்ரே) கதிரியக்கம் மூலமாக நோய்களைக் குணப்படுத்துதல்

radiometallography: (இயற்.) ஊடுகதிர் உலோக உள்ளமைப்பு ஆய்வியல் : உலோகங்களின் உள் கட்டமைப்பினையும் பண்புகளையும் ஊடுகதிர்கள் (எக்ஸ்ரே)மூலம் ஆராயும் முறை