பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
523

மிகுதியாகவுள்ள ஓர் ஆக்சிஜன் எரிவாயுப் பிழம்பு

reducing glass : குறைப்பு ஆடி : பொருட்களின் வடிவளவினைக் குறைத்துப் பார்க்க உதவும் ஓர் இரட்டைக்குழி ஆடி

reduction gears : (பொறி.) வேகக் குறைப்புப் பல்லிணை: சுழல் தண்டின் வேகத்தைக் குறைப்பதற்குப் பயன்படும் பல்லிணை

redwood : செம்மரம் : எடை மிகக் குறைவாகவுள்ள ஒருவகை மரம். இதன் ஒரு கன அடி எடை 281 பவுண்டு. இது மென்மையானது. இதன் இழையமைப்பு மிக நேர்த்தியானது; சுரணையுள்ளது. இது வெட்டுமரம். செம்புழுப்பு நிறத்தில் இருக்கும். இதில் வேலைப்பாடுகள் செய்வது எளிது. ஆனால் எளிதில் பிளவுபட்டு விடும். நீரையும், ஈரத்தையும் தாங்கி நெடுநாள் உழைக்கக் கூடியது

reeding : (மர.வே.) (1) நாணல் வரி ஒப்பனை : நாணல் போன்ற வரி ஒப்பனை செய்தல். (2) நாணயச் சூழ்வரி : நாணயத்தின் விளிம்புச் சூழ்வரி

reference marks : (அச்சு.) சுட்டுக் குறிப்புகள் : நூல்களில் மேற்கோள்களைச் சுட்டும் குறிப்புகளை அடிக்குறிப்புகளில் காட்டுதல்

reflex reflectors : (தானி. எந்.) பின்னொளிப் பிரதிபலிப்பான்: ஒரு கோணத்திலிருந்து வந்து ஒரு பொருளை ஒளிர்வுடையதாகக் காட்டும் ஒளியைப் பிரதிபலிக்கிற ஓர் ஒளியியல் சாதனம்

reflection : (மின்.) பிரதிபலிப்பு : ஒளிவகையில், ஓர் ஒளிக்கதிர் எந்த ஊடகத்தின் வழியாகப் பயணம் செய்கிறதோ அந்த ஊடகத்திலிருந்து வேறுபட்ட ஓர் ஊடகத்தைத் தாக்கம்போது பிரதிபலித்தல்

reflector: (மின்.) பிரதிபலிப்பான்: ஒளிக்கதிரை மீள எறியும் பொருள் அல்லது மேற்பரப்பு. கதிர்வீச்சினை ஒரு குறிப்பிட்ட திசையில் வலுப்படுத்துவதற்காகக் கதிர்வீச்சுக் கம்பிக்குப் பின்புறமாக வைக்கப்படும் வானலை வாங்கிக் கம்பி. ஏற்கப்பட்ட சைகைகளை வலுப்படுத்தி, பின்புறமிருந்தோ அல்லது தேவையற்ற திசையிலிருந்தோ சைகைகளைப் பற்றி எடுப்பதைத் தடுப்பதற்கான ஒரு வானலை வாங்கிக் கம்பி

reflex circuit: (மின்.) திரும்பு மின்சுற்றுவழி: இது ஒரு வானொலி ஏற்பு மின்சுற்று வழி. இதில், சைகைகளைக் கண்டறிந்த முன்பும் பின்பும் சைகைகளைப் பெருக்குவதற்கு ஒரே குழல்கள் பயன்படுகின்றன

refraction: (இயற்.) ஒளிக்கோட்டம்: வெவ்வேறு அடர்த்திகளுடைய ஊடகங்கள் வழியாக ஒளிக் கதிர் செல்லும் போது ஒளிக்கதிர் கோட்டமுறுதல். எடுத்துக்காட்டாக, காற்றிலிருந்து நீருக்குள் ஒளிக்கதிர் செல்லும் போது ஒளிக்கதிர் கோட்டமடைகிறது

refraction index: (மின்.) கோட்ட விகிதம்: தடையற்ற இடப்பரப்பில் அலைக்கதிர் வீச்சின் வேக வீதத்திற்கும் மற்றப் பொருள்களில் வேக வீதத்திற்குமிடையிலான விகிதம்

refractory: உருகாப் பொருள்: உயர்ந்த அளவு வெப்பத்திலும் உருகாமல் வெப்பத்தை ஏற்கக் கூடிய பொருள். எடுத்துக்காட்டாக, சீனக்களிமண் உருகாமல்