பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

524

வெப்பத்தின் செயலை எதிர்த்து நிற்கக்கூடியது

refrigerant: (குளிர். பத.) உறை குளிரூட்டி: ஒரு குளிர்பதன அமைப்பில் பயன்படுத்தப்படும் குளிரால் உறைபதனம் ஊட்டும் பொருள். இது குறைந்த வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் ஆவியாகி வெப்பத்தை எடுத்துக் கொள்கிறது. உயர்ந்த வெப்ப நிலையிலும் அழுத்தத்திலும் சுருங்குவதன் மூலம் வெப்பத்தை வெளியிடுகிநிறது

refrigerating: (எந். பொறி.) குளிர்சேமிப்பு முறை: உணவுப் பொருள்களைக் குளிர்சேமிப்பு செய்து பாதுகாப்பதற்கான முறை

refrigerator: குளிர்காப்புப் பெட்டி: குளிர்பதனப்படுத்துவதற்கான குளிர்காப்புப் பெட்டி

regelation: (குளிர்.பத.). மறு உறைதல்: உருகிய அழுத்தத்தில் நீரை மீண்டும் உறையும்படி செய்தல், பனிக்கட்டித் துண்டுத் துகள் குவியல் வகையில் புறமுருகி இணைந்து உறைதல்

register:, (அச்சு.) ஒத்தியைபு நிலை (1) அச்சுக்கலையில் தாளின் இரு புற அச்சமைவின் ஒத்தியைவு. வண்ணங்களின் ஒத்தியைவு. (2) ஒளிப்படக்கலையில், தகடு ஒளிக்கதிர்த் திரைக்குவியம் ஆகியவற்றின் ஒத்தியைபு நிலை

regular polygon: (கணி. ) வடிவொழுங்குப் பலகோணக்கட்டம்: அமைப்பொழுங்குடைய நான்கிற்கு மேற்பட்ட பல பக்கங்களையுடைய வரைப்படிவம்

regulation: (மின்.) சீர்மை: மின்னாக்கியின் அல்லது மின்வழங்கீட்டின் உற்பத்தியில், மின்சுமையில் மாறுதல் ஏற்படும் போது அழுத்தத்தில் ஏற்படும் மாறுதல்

regulation, percentage of (மின்.) சீர்மை : மின்னாக்கியின் அல்லது மின்வழங்கீட்டின் உற்பத்தியில், மின் சுமையில் மாறுதல் ஏற்படும்போது அழுத்தத்தில் ஏற்படும் மாறுதல். சதவீதம் (விழுக்காடு)

மின்சுமையின்மை-முழுமின்சுமை X 100 / முழு மின்சுமை = ...%

reinforced concrete: (க.க) வலுவாக்கிய வார்ப்புக் காரை: வலுவை அதிகமாக்குவதற்காக இரும்புக்கட்டை, கம்பிகள் கொண்டு வலுவாக்கிய வார்ப்புக்கரை

reinforcement: (குழை.) வலிவூட்டும் பொருள்: பிளாஸ்டிக் பொருளுக்கு வலிவும், விறைப்பும் அளிக்கக்கூடிய பொருள். இவை பெரும்பாலும் கண்ணாடி இழை உடையதாக இருக்கும். பிசின் இழை, நாரிழை, கல்நார் போன்ற பொருள்களும் இதற்குப் பயன்படுகிறது

reinforcing steel: (பொறி.) வலிவூட்டும் எஃகு: கான்கிரீட் கட்டுமானத்தில் அதிக வலிவூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் எஃகுச் சலாகைகள்

reject circuit: (மின்.) ஏலாச்சுற்றுவழி : ஒத்திசைவுள்ள இணையாக இசைவிப்பு செய்யப்பட்டுள்ள மின்சுற்றுவழி. இது ஒத்திசைவு அலைவெண்ணில் சைகைகளை விலக்கி விடுகிறது

relative conductance : (மின்.) தொடர்பு மின்கடத்தாற்றல்: வெள்ளியை அடிப்படையாகக் கொண்டு ஒரு மின்னூடு கடத்தியின் மின் கடத்தாற்றல். வெள்ளியின் மின் கடத்தாற்றல் 100%